Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமா“ உங்களுக்கும் மாயாவுக்கும் இடையே... ” கமலை தப்பாக பேசியதால் கடுப்பான ரசிகர்கள்.. பயந்து மன்னிப்பு...

“ உங்களுக்கும் மாயாவுக்கும் இடையே… ” கமலை தப்பாக பேசியதால் கடுப்பான ரசிகர்கள்.. பயந்து மன்னிப்பு கேட்ட புகழ்.. !

பரபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை வந்த மாயாவுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் துவக்கம் முதலே சப்போர்ட் செய்து வந்தார் என குற்றச்சாட்டுகள் இணையத்தில் எழுந்தன.

- Advertisement -

அதற்கேற்றவாரு நடிகர் புகழ் மற்றும் குரேஷி இருவரும் இரு மாதங்கள் முன்னர் செய்த காமெடி தற்போது இணையத்தில் வைராலாகி பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. ரசிகர்கள் கடுப்பானதை அடுத்து இருவரும் தனித் தனியாக மனிப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் டிவி புகழ் – குரேஷி இருவரும் மேடையில் காமெடி செய்தனர். புகழ் கேள்வி கேட்கவும், குரேஷி தொகுப்பாளர் கமல் போல நடித்தார். புகழ், “ உங்களுக்கும் மாயாவுக்கும் ” என கமலை மையப்படுத்தி கேள்வி கேட்டார்.

- Advertisement -

பிறகு, உங்களுக்கு பிடித்த இடம் எது என்ற கேள்விக்கு குரேஷி மாயாஜால் என பதிலளித்தார். பிறகு பிடித்த படத்திற்கு மாயா பஜார் எனவும் பிடித்த ஊர் கேள்விக்கு மாயாவரம் எனவும் சொன்னார். இது அனைத்தும் கமல்ஹாசனை கேலி செய்யும் விதமாக அமைந்தது.

- Advertisement -

தற்போது இது பெரிய சர்ச்சையானதை அடுத்து இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். புகழ் வெளியிட்ட வீடியோவில், “ கமல் சாரின் மேல் எனக்கு பெரிய மரியாதை உள்ளது. எந்த அளவுக்கு என்றால் ஒருமுறை ஏதோ ஒரு புகைப்படத்தில் அவரின் பின்னால் நான் ஓரமாக இருப்பதைக் கூட நான் பெருமையாக நினைத்து போஸ்ட் செய்தேன். ”

“ ஸ்கிரிப்ட் படி நகைச்சுவைக்காக மட்டுமே அன்று நாங்கள் அவ்வாறு பேசினோம். கமல் சார் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ” எந்த வருத்தமாக பேசினார். மறுபக்கம் குரேஷியும் தன் வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Most Popular