Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாராதிகா, சரத்குமாருக்கு பிறந்த மகனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே

ராதிகா, சரத்குமாருக்கு பிறந்த மகனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே

- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகை ஆக வளம் வந்தவர் ராதிகா. இந்த நடிப்பு திறமை ராதிகாவுக்கு தனது ரத்தத்திலே ஊறிப் போயிருக்கிறது. ஏனென்றால் அவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் அல்லவா.  இவருடைய அண்ணன் பிரபல நடிகர் ராதாரவி. ராதிகாவின் தங்கை நிரோஷாவும் சினிமா நடிகையாக வலம் வந்தவர்.

ராதிகா 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகையும் அதன் பிறகு தொலைக்காட்சி உலகையும் கட்டி ஆண்டவர். ராதிகாவுக்கு ஆறு ஃபிலிம் பேர் விருதுகளும், இரண்டு நந்தி விருதுகளும் மூன்று முறை தமிழக அரசுக்கான சிறந்த நடிகை விருது பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ராதிகா 1985 ஆம் ஆண்டு பிரதாப் போத்தனை முதல் திருமணம் செய்தார்.

- Advertisement -

அவருடன் ஒரு ஆண்டு வாழ்ந்த நிலையில் அதன் பிறகு 1990 முதல் 92 ஆம் ஆண்டு வரை ரிச்சர்ட் ஹேட்லி என்ற வெளிநாட்டு நபரை திருமணம் செய்த ராதிகா அவரையும் விவகாரத்து செய்தார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் தனியாக வாழ்ந்த ராதிகா பிறகு 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி பிரபல நடிகர் சரத்குமாரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

அதன் பிறகு இந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ராதிகாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் சரத்குமார் உடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு ஒரு மகனை பெற்றுக் கொண்டார். இந்த மகன் பெயர் தான் ராகுல். தற்போது இந்த ராகுல் வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி உள்ளார். ராகுலின் புகைப்படத்தை இந்த தம்பதி எங்கேயும் காட்டிக் கொண்டது கிடையாது.

தற்போது சரத்குமாரின் வாரிசு போட்டோ முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சரத்குமாரையும் ராதிகாவையும் கலந்த மாதிரி ராகுல் இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து திரும்பி உள்ள ராகுலை சரத்குமாரும் ராதிகாவும் கட்டி அணைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது .ராதிகாவுக்கு பிறந்த மகள் ரயானே கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் அபிமன்யுமித்துணை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular