Monday, May 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான லாரனஸ்.. இந்த செய்தி வெளியவே வர்லயே?

நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான லாரனஸ்.. இந்த செய்தி வெளியவே வர்லயே?

- Advertisement -

சினிமாவில் ஹீரோக்களாக வருபவர்கள் எல்லாம் நிஜ வாழ்வில் ஹீரோவாகி விட முடிவதில்லை. சினிமாவில் ஏழைகளுக்கு உணவளிப்பது, இலவசமாக கல்வி கொடுப்பது,சொத்துக்களை தானமாக வழங்குவது, பொற்காசுகளை அள்ளி இரைப்பது போன்றெல்லாம் காட்சிகளில் ஹீரோக்கள் நடித்திருப்பார்கள்.

ஆனால் நிஜ வாழ்வில் தன்னுடைய ரசிகர்களோடு ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட முகமலர்ச்சியுடன் நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் சினிமாவில் ஹீரோக்களாக தான் நடித்து வருகிறார்கள்.இவர்கள் மத்தியில் நிஜ வாழ்விலும் ஹீரோவாக கொண்டாடப்படக்கூடிய இடத்தில் நடிகர் லாரன்ஸ் தற்பொழுது ஒரு செயலை செய்திருக்கிறார்.

- Advertisement -

இவர் இயல்பாகவே உதவும் குணம் உள்ளவர். இதுவரை நிறைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான உதவியை செய்து இருக்கிறார். வெளியில் தெரியாமல் எவ்வளவோ உதவிகளும் இவர் செய்திருக்கலாம். ஆனால் தற்பொழுது இவர் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

- Advertisement -

அந்த விழாவை முன்னிட்டு அது சிறப்பிக்கும் வகையில் நடிகர் லாரன்ஸ் 105 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார்
தான் தத்தெடுத்த இந்த 105 குழந்தைகளுக்கும் உண்ண உணவு, உடுத்த உடை ,மருத்துவ செலவு கல்விக்கான செலவு என்று எல்லாவற்றையும் நடிகர் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை இசை வெளியீட்டு விழா மேடையில் குழந்தைகள் முன்னிலையில் அறிவித்தார்.

நடிகர் லாரன்ஸ் சிங் இந்த செயல் ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தது. ரசிகர்கள் மத்தியில் நடிகர் லாரன்ஸ் இப்பொழுது மிகப்பெரிய மனிதராக உயர்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் லாரன்ஸ் இன் இந்த செயல் பிற நடிகர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிவதில்லை.பலர் சரியான முறையில் வரி செலுத்துவதும் இல்லை.  இப்படித்தான் பெரும்பாலான நடிகர்கள் இருக்கிறார்கள், இனியாவது அவையெல்லாம் செய்யாமல் இது போன்ற நல்ல காரியங்களில் செலவு செய்ய வேண்டும்  என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Most Popular