Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாதலைவர் -170 இவ்வளவு தான் கால்ஷீட்டா? விரைவில் முடிக்க திட்டம்

தலைவர் -170 இவ்வளவு தான் கால்ஷீட்டா? விரைவில் முடிக்க திட்டம்

வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. மொழிகளில் வெளியிடப்பட இருக்கும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இத்திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க போவதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது. ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய 170 வது திரைப்படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் சூர்யா நடித்து ஓட்டிட்டியில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படத்தை இயக்கப் போகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தெலுங்கு சினிமாவின் பிரபல நட்சத்திரமான நானி பாலிவுட் தெரியுமாவின் பிரபல மான அமிதாப்பச்சன் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் மாமன்னன் திரைப்படத்தின் வில்லனாக கலக்கிய பகத் பார்சல் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.இவருடைய வில்லத்தனத்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தை லைக் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெய்லர் திரைப்படத்தில் தலைவர் நிரந்தரம் கவலையா ரத்தமாரேஎன்றெல்லாம் பல கோணங்களில் பாடல்கள் இயக்கி ரசிகர்களை ஈர்த்த இசையமைப்பாளர். அனிருத் ரவிச்சந்திரன் தான் தலைவர் 170 திரைப்படத்தின் உடைய இசையமைப்பாளர் ஆவார்.

இதேசமயம் இந்த திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் 50 நாட்கள் மட்டுமே தான் நடிக்கப் போகும் பகுதிக்கு அனுமதி கொடுத்திருக்கிறாராம். இந்த 50 நாட்களுக்குள் ஒரே செட்யூல் ஆக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பகுதியை இயக்குவதற்கு இயக்குனர் ஞானவேலும் ஒப்புக்கொண்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றாராம்.

வருகின்ற செப்டம்பர் அக்டோபர் ஆகிய இரண்டு மாதத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து திரைப்படத்தின் கதையை இயக்கப் போகிறார். மேலும் வருகின்ற வருடம் 2024 கோடை விடுமுறையின் போது இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே வந்த அறிவிப்புகளின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்படுகிறது.இந்த திரைப்படத்தினுடைய படப்பிடிப்பும் இதே ஆண்டில் துவங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்து வரிசையாக படங்களின் நடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Most Popular