Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாலால் சலாம்- மகள் இயக்கும் அழகை பார்த்து பூரிக்கும் ரஜினி

லால் சலாம்- மகள் இயக்கும் அழகை பார்த்து பூரிக்கும் ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படம் முற்றிலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்படும் திரைப்படமாகும்.

- Advertisement -

இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்பொழுது இத்திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. திரைப்படத்தினுடைய படப்பிடிப்பை பார்க்க பலரும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது வழக்கம் தான். அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய செயல்பாடுகளை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள்

- Advertisement -

பொதுவாக இளம் நடிகர்கள் கூட தன்னுடைய படப்பிடிப்புக்கான பகுதிநேரம் முடிந்ததும் ஓய்வெடுக்க சென்று விடுகிறார்கள் தனக்கான நேரம் இல்லாதபோதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் மிகவும் அரிதுதான்.

- Advertisement -

இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு நகராமல் தன் மகள் இயக்கம் திரைப்படத்தை எப்படி படம் ஆக்குகிறார்கள் என்பதை கண்காணிக்கிறார்.மேலும் மகளின் திறமையை பார்த்து தந்தை ரஜினி ரசிக்கிறாராம்.இந்த செயல் அவர் ஒரு நல்ல நடிகன் என்பதை விட நல்ல தந்தை என்பதையும் உணர்த்துகிறது.

ஆயினும் இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இருக்கும் சுறுசுறுப்பையும் ஆர்வத்தையும் பார்ப்பதற்கு அதிசயமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் தான் அவர் இன்னும் சூப்பர் ஸ்டார் என்ற அரியணையை விட்டு இறங்காமல் இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் விக்ராந்த் விஷ்ணு விஷால் சூப்பர் ஸ்டார் இவர்களுடன் இணைந்து கபில்தேவ் ஹோமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நகைச்சுவை நடிகர் செந்திலும் இணைந்து வரும் காட்சிகள் படையப்பா திரைப்படத்தில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது இன்று வரையும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறது. மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து நகைச்சுவை காட்சிகள் வந்தால் நிச்சயம் ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular