Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஅந்த பக்கம் போ சொல்லுங்க.. ஜிவி பிரகாசை பார்த்து கடுப்பான ரஜினி

அந்த பக்கம் போ சொல்லுங்க.. ஜிவி பிரகாசை பார்த்து கடுப்பான ரஜினி

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தேசிய விருது வென்றவர் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமானின் உறவினரான இவர் அவரைப்போலவே திறமை கொண்டவர்.

- Advertisement -

வெயில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களுக்கு அப்போதே இசை அமைத்து தாம் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்தார். மேலும் இசையமைப்பாளராக நிறுத்திக் கொள்ளாமல் தன் உடல் எடையை குறைத்து நடிகராகவும் வளம் வந்தார்.

தற்போது மீண்டும் இசையில் ஜிவி பிரகாஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினி ஜிவி பிரகாஷ் முதலில் பார்த்தது குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் குசேலன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக  பி வாசு அறிமுகம் செய்தார்.

- Advertisement -

அப்போது இவ்வளவு சின்ன பயன் என்று சொல்றீங்களே அவர் எப்படி பணியாற்றுவார் என்று ரஜினி கேட்டவுடன் இவர்தான் வெயில் படத்திற்கெல்லாம் இசை அமைத்திருக்கிறார் என்று வாசு பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

இந்தப் பையனா இவ்வளவு சூப்பரா மியூசிக் போட்டு இருக்காரு என்ற சந்தேகத்தில் நடிகர் ரஜினி சங்கரை தொடர்பு கொண்டு அந்த பையன் எப்படி அவருடன் பணியாற்றலாமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு சங்கர், நல்ல திறமைசாலியான பையன். என்ன இரவு நேரத்தில் தான் தனது மாமா போல் இசை போட்டு தருவார் என்று கூறியுள்ளார்.

சரி அந்த பையனை நம்ம பார்த்ததில்லை அவரை பார்க்கணும் என்று நான் கூறியிருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நான் அமர்ந்திருந்த போது ஒரு பையன் என் அருகில் வந்து நின்று கொண்டிருந்தார்.

என்னையே பார்த்து சிரித்தார். நானும் அவரை பார்த்து ஏன் இந்த பையன் இங்கே நிற்கிறான்.ஒரு போட்டோ என்றால் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே. யார் இந்த பையனை இங்கு விட்டது என்று நான் துணை இயக்குனர்கள் மீது கோபமாக இருந்தேன்.

அப்போது ஹலோ சார் என்று அந்தப் பையன் பேசினார். என்னப்பா போட்டோவா என்று கேட்டு நானும் போட்டோ எடுத்துக் கொண்டேன். அதன் பிறகும் அந்தப் பையன் அங்கிருந்து போகவே இல்லை.

அங்கே நின்றார். இதனால் எனக்கு கடுப்பாகிவிட்டது. அப்போதுதான் துணை இயக்குனர்கள் வந்து கூறினார்கள் சார் இது தான் ஜிவி பிரகாஷ் என்றார்கள். உடனே ஓ மை காட் இந்த பையன் தானா அது என்று நான் அவரை கட்டி அணைத்து பாராட்டினேன் என்று ரஜினி கூறினார்.

Most Popular