Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentரஜினியின் 170வது படத்தில் என்ட்ரி கொடுக்கும் தெலுங்கு நடிகர் நானி… அமிதாப் பச்சனும் இருப்பதால் படுகுஷியில்...

ரஜினியின் 170வது படத்தில் என்ட்ரி கொடுக்கும் தெலுங்கு நடிகர் நானி… அமிதாப் பச்சனும் இருப்பதால் படுகுஷியில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு ஜெய்பீம் படம் புகழ் ஞானவேலுக்கு கிடைத்தது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சூர்யாவை வைத்து சம்பவம் செய்த ஞானவேல் சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை நிச்சயம் வீணடிக்க மாட்டார். ரஜினியை வைத்து வேற லெவலில் சம்பவம் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைப்பார் என தலைவர் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

- Advertisement -

ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. அவர் ஒரு இஸ்லாமியராக நடிக்கிறாராம். போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரம் என கூறப்படுகிறது. காவல் துறையில் நடக்கும் அத்துமீறல்களை திரையில் காட்டப் போகிறாராம் ஞானவேல். லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், ஆனால் கதை கேட்ட பிறகும் ரஜினிக்கு எதிரியாக நடிக்க விக்ரமுக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவர் இதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ரஜினிகாந்த் – ஞானவேல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

ரஜினி – அமிதாப் இருவரும் இணைந்து கடைசியாக ஹும் படத்தில் நடித்தனர். 1991 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் தற்போது மீண்டும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைய உள்ளனர். படத்தில் ரஜினிக்கு இணையான வலுவான கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில், தற்போது புதிய தகவலாக தெலுங்கு நடிகர் நானியும் படத்தில் இணைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தலைவர் 170-ல் நானிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றும், 20 நிமிடங்கள் அவர் காட்சிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தலைவர் 170-ல் அமிதாப் பச்சன் இணைந்துள்ள சூழலில், தற்போது நானியும் கதைக்குள் வந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Most Popular