சினிமா

ரஜினி 170 மற்றும் 171 அப்டேட் வெளியானது; இரண்டு படங்களின் பூஜை எப்போது நடைபெறும்? இயக்குனர்கள் யார்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “நெல்சன்” இயக்கத்தில் “அனிருத்” இசையமைப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன் பீஸ்ட் படத்தினை இயக்கினார் நெல்சன். எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை என்பதால் நெல்சன் உடன் இணைவதை ரஜினி கைவிட்டுவிட்டார் என தகவல் வெளியானது.

ஆனால் அதெல்லாம் இல்லை என்னும் அளவுக்கு ஜெயிலர் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 22ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் இதில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக பெயர்கள் அடிபட்ட நிலையில் தான் நடிப்பதை ரம்யா கிருஷ்ணனே உறுதி செய்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் கனடா நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ரஜினியின் 170 மற்றும் 171 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ரஜினியின் 170வது படத்தை ‘டான்’ படத்தின் டைரக்டர் ஆன சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான அப்டேட்கள் நாலு மாதங்களுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நடிகர் ரஜினிகாந்த் தனது தற்போதைய ப்ராஜெக்டை முடித்த பின் மட்டுமே அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்குவார்.

ரஜினியின் 171 படத்தினை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாகவும், படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. ரஜினியின் இந்த 170 மற்றும் 171 வது படத்திற்கான பூஜை நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top