Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainment”ரத்னம்” படப்பிடிப்பை முடித்த நடிகர் விஷால்.. அடுத்ததாக துப்பறிவாளன் 2 தான்.. டைரக்‌ஷனில் களமிறங்கும் புரட்சி...

”ரத்னம்” படப்பிடிப்பை முடித்த நடிகர் விஷால்.. அடுத்ததாக துப்பறிவாளன் 2 தான்.. டைரக்‌ஷனில் களமிறங்கும் புரட்சி தளபதி.. அங்கதான் ட்விஸ்ட் இருக்கு!

தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஷால் – ஹரி கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் ரத்னம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் சாப்பிடுகையில், அவர் 3 கடவுளையும் கும்பிட்ட போது அருகில் இருந்து யோகி பாபு கொடுத்த ரியாக்‌ஷன் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம், விஷால் – ஹரி கூட்டணிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரத்னம் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், தூத்துக்குடி, சென்னை, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அண்மையில் தூத்துக்குடியில்ல் நடைபெற்ற கிளைமேக்ஸ் சண்டை காட்சியை 2 நாட்களில் முடித்து விஷால் அசத்தினார். அத்துடன் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்ததாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த படம் மே மாதம் ரிலீஸாகும் என்று நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தாமிரபரணி, பூஜை பட பாணியில் குடும்பத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆக்‌ஷன் படம் என்றும் அறிவித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த பின், உடனடியாக துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விஷால் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

அதற்கேற்றப்படி ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தின் பிளாக் அண்ட் ஒயிட் போஸ்டரை விஷால் பகிர்ந்துள்ளார். ரத்னம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த சூழலில், உடனடியாக துப்பறிவாளன் 2 படத்தின் பணிகளை விஷால் தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியே காரணம் என்று கூறப்படுகிறது.

ரத்னம் படம் இன்னும் 4 மாதங்களில் ரிலீஸாக உள்ள நிலையில், அடுத்ததாக துப்பறிவாளர் 2 படத்தை இயக்கி நடிக்க விஷால் தீவிரமாக உள்ளார். அதேபோல் பொல்லாதவன் படத்தின் இயக்குநர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிகர் விஷால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விஷால் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Most Popular