Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeEntertainmentலியோவில் மூன்றே மணி நேரத்தில் எனக்கான காட்சிகளை எடுத்து முடித்தார் லோகேஷ் கனகராஜ்… அனுராக் காஷ்யப்...

லியோவில் மூன்றே மணி நேரத்தில் எனக்கான காட்சிகளை எடுத்து முடித்தார் லோகேஷ் கனகராஜ்… அனுராக் காஷ்யப் குமுறல்…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் வெளியாக அதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள மாநிலத்தில் கட்டவுட் பாலபிஷேகம் பேரணி என அமர்க்கள படுத்தினர் விஜய் ரசிகர்கள். இதே போல் பெங்களூருவிலும் லியோ படத்தின் கொண்டாட்டம் களைகட்டியது.

- Advertisement -

படத்தைப் பொறுத்தவரையில் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும் ஆனால் இரண்டாம் பாதி சற்று சுமாராகதான் உள்ளது என்றும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் அவ்வளவு அழுத்தமாக இல்லை என்றும், லியோ கதாபாத்திரத்திற்கான காட்சிகள் எடுபடவில்லை என்றும் சிலர் கூறுவதை கேட்க முடிகிறது. அதேபோல் எல்சியு-வும் திணிக்கப்பட்டது போன்று தான் உள்ளது என்றும், அதில் சொல்ல எதுவுமே இல்லை என்றும் விமர்சனங்கள் வெளி வருகின்றன.

எது எப்படி இருந்தாலும் படத்தின் முதல் பாதிக்கே, திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தோளில் சுமந்து நடித்துப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதன் முதல் நாளில் மட்டும் 115 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருகிறார். அந்த சீனிலும் அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதைப் போல, காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவ்ளோ பெரிய இயக்குனருக்கு இந்த ஒரே ஒரு காட்சி மட்டும் தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதற்கான பதிலை அனுராக் காஷ்யப் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,

- Advertisement -

நான் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் படத்தில் எனக்கு ஒரு சாவு காட்சி வேண்டும் என்று கேட்டேன். அந்தப் பேட்டியை அவர் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் எனக்கு கால் செய்து சார் நகைச்சுவையாக தான் இதை கூறினீர்களா என்று கேட்டார். நான் இல்லை எனக்கு உண்மையிலேயே ஒரு சின்ன காட்சி வேண்டும் என்று தெரிவித்தேன். உடனடியாக அவர் எனக்கு ஒரு மரண காட்சி இருப்பதாக கூறினார்.

இதன் பிறகு நான் படப்பிடிப்புக்கு வந்து எனது கதாபாத்திரத்தில் நான் முழு கவனமும் செலுத்த, 3 மணி நேரத்தில் எனக்கான காட்சிகள் முடிக்கப்பட்டன. விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில், என்னை நீங்கள் சரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கலாம். ஆனால் இந்த லியோ படத்தின் காட்சியை நான் விரும்பி தான் நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். அனுராக் காஷ்யப்பின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular