சினிமா

வாரிசு படத்தில் ரீமிக்ஸ் ஆகும் தளபதி விஜயின் விண்டேஜ் பாடல்! வாரிசு படத்தின் கதை இதுதான்!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது திரைப்படம் வாரிசு. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பம் சார்ந்த கடையில் நடிக்கிறார் விஜய். இப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

வாரிசு படத்தினை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையிடப்பட உள்ளது. தமிழ் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கண்டு களிக்கும் வண்ணத்தில் உருவான குடும்பப்பாங்கான கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

Advertisement

வாரிசு படம் காவலன் மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கலவையாக இருக்கும் என பேசப்பட்டு வருகின்றன. இதில் விஜயின் பெயர் ராஜேந்திரன் அவர். ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் எனும் நிறுவனத்தின் சிஇஓ ஆக நடித்திருக்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா கேமியோ தோற்றத்தில் பிசினஸ்மேன் ஆக நடிக்கிறார். இதில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் மல்டி மில்லியனர் இவரின் மூன்றாவது மகன் தான் தளபதி விஜய்.

Advertisement

இப்படத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விஜய் ஏற்கனவே நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ‘யூத்’ படத்தின் “ஆல்தோட்ட பூபதி” பாடல் ரீமேக் செய்துள்ளது. இப்பாடலுக்கு மீண்டும் விஜய் நடனம் ஆடுகிறார்.

இந்த செய்தி வெளிவந்தவுடன் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படம் ஜனவரி 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top