94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் சயின்ஸ் அகடமியில் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டிற்கான விருதுகள் போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் இந்திய சார்பாக குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
ஆஸ்கர் விருது என்றாலே நாம் ஆசைப்படுவது ஏதேனும் தென்னிந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனவா என்பதுதான். அவ்வகையில் இந்த வருடம் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், மற்றும் பலர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் தேர்வாகாதது படக்குழுவினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் இவ்வருடம் முதல் இடத்தை பிடித்த ஆர் ஆர் ஆர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கக் கூடிய கதைக்களத்தை கொண்டிருந்தது. அவ்வகையில் ஒரு உண்மையான கதைகளத்தை கொண்ட ஆர் ஆர் ஆர் ஆஸ்கர் விருது பட்டியலில் இல்லாதது படக்குழுவினருக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது.
இருப்பினும் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டு படங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியும். அந்த விதத்தில் தற்போது சில பிரிவுகளில் ஆர் ஆர் ஆர் படம் கலந்து கொள்கிறது. இதில் இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப், மற்றும் ஹேர் ஸ்டைல்,சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இப்படம் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.