சினிமா

தளபதி 67ல் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் சாண்டி மாஸ்டர்.. !படத்தில் நடிப்போரின் பட்டியல் அதிகாரபூர்வ அறிவிப்பு.. !

Thalapathy 67 Cast

ரசிகர்கள் பல மாதங்கள் காத்திருந்த தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ பூர்வ நேற்று மாலை 6:07க்கு வெளியானது. போஸ்டரில் வெறும் படத்தின் தொழில்நுட்ப ஆட்க்கள் பெயர்கள் கொண்ட ஓர் சாதாரண அப்டேட் தான் அது. இருப்பினும் அதைக் கொண்டாடி தீர்த்தனர். இதில் சுவையான விஷயம் என்னவென்றால், இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர். விஜய்யுடன் இது நான்காவது முறை.

படத்தில் ஏற்கனவே கௌதம் மேனன், மிஷ்கின் இருப்பது உறுதியாகிவிட்டது, இருப்பினும் ஓர் போஸ்டர் மூலமாக அவர்களை வரவேற்பது போல் அப்டேட் ஏதும் வரவில்லை. அதையும் விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை சஞ்சய் தத் செய்கிறார். போஸ்டரில் சஞ்சய் தத்தின் வார்த்தைகளும் பதிக்கப்பட்டிருந்தன.

Advertisement

“ நான் தளபதி 67 படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்ட போதே முடிவு செய்துவிட்டேன், நான் இதில் நிச்சயம் இருக்க வேண்டுமென. படத்தில் பணியாற்ற மெய் சிலிர்த்துள்ளேன். ” என்றார் கே.ஜி.எப் வில்லன். அடுத்ததாக படக்குழு பிரியா ஆனந்த் இருப்பதை உறுதி செய்தது. இது பெரிய சர்ப்ரைஸ் இல்லை என அவர்களே போஸ்டருக்கு கீழ் போட்டுள்ளனர். அதுவும் உண்மை தானே, தெரிந்த விஷயம் என்பதால்.

மூன்றாவது தான் மிகவும் பெரிய ஆச்சரியம். படத்தில் சாண்டி மாஸ்டர் இருப்பது ஏற்கனவே கேள்விப்பட்ட ஒன்று தான். ஆனால் படக்குழு கொடுத்துள்ளார் ஷாக் என்னவென்றால், அவர் இங்கு டான்ஸ் மாஸ்டர் இல்லை நடிகராக சிறப்பிக்க உள்ளாராம். சாண்டி மாஸ்டர் கூறியதாவது, “ இது எனக்கு பெரிய ஸ்பெசல் மொமன்ட். தளபதி 67 படத்தில் ஓர் நடிகராக சேர்ந்தது மிகவும் பெருமையாகவும் உள்ளது. தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஸ்கிரீன் ஷேர் செய்வத்தை எப்படி இருக்கப் போகிறது என என்னால் வார்த்தையில் விரிவுபடுத்த இயலவில்லை. ” என தன் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இது தவிர திரிஷா, சத்யராஜ் இருப்பதை விஜய் ரசிகர்கள் அவர்கள் வழியில் உறுதி செய்துள்ளனர். படக்குழு கேசுமிர் செல்லும் விமானத்தைக் கண்டுபிடித்து, ஸ்பைஸ்ஜெட் வெப்சைட்டில் சென்று பயனாளிகள் லிஸ்ட் மூலம் படத்தில் நடிப்போரின் பட்டியலை எடுத்துள்ளனர். ஆனாலும் ரொம்ப வெறியாக இருக்காங்க பா இந்த விஜய் ரசிகர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top