Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஜிம் போக முடியலையா? நான் சொல்றதை செய்யுங்க.. இளைஞர்களுக்கு சரத்குமார் அறிவுரை

ஜிம் போக முடியலையா? நான் சொல்றதை செய்யுங்க.. இளைஞர்களுக்கு சரத்குமார் அறிவுரை

பாலிவுட் டோலிவுட் போன்ற சினிமாக்களில்  பாடி பில்டர்ஸ்  என்றால் ஒரு லிஸ்ட்டே இருப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் பாடி பில்டர் என்றால் என்றும் நினைவில் இருப்பது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான்.

- Advertisement -

தமிழ் சினிமாவின் பாடி பில்டபர் என்றாலே என்ன என்று தெரியாத காலத்தில் இருந்தே கட்டுடல் மேனியை காட்டி மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டம் பெற்ற புகழுக்குரியவர் சரத்குமார். இவருடைய இந்த மேனிய அமைப்பிற்கு இவர் என்னென்ன செய்கிறார் என்பது பலரிடமும் உள்ள கேள்விக்குறிதான் .

இந்த வயதிலும் எப்படி இவ்வளவு பிட்டாக இவரால் இருக்க முடிகிறது என்ற கேள்வியை தற்பொழுது ரசிகர்கள் சார்பாக பிஹைன்டுவுட்ஸ் நடத்திய ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கோபிநாத் சரத்குமார் இடம் கேட்டு விட்டார்.

- Advertisement -

பிசினஸும் செய்கிறீர்கள், சினிமாவிலும் நடிக்கிறீர்கள் உங்களால் எப்படி பாடி பில்டப்பில் இன்னும் கவனம் செலுத்த முடிகிறது .அதற்காக என்னென்ன செய்கிறீர்கள் .அதை நாங்கள் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளை நடிகர் சரத்குமாரிடம் முன் வைத்தார் தொகுப்பாளர் கோபிநாத்.

- Advertisement -

அதற்கு நடிகர் சரத்குமார் கூறிய பதில்கள் வியப்பாக இருந்தது அவருடைய தந்தை ஒரு ஸ்போர்ட் பர்சன் அதனால் அவர் பார்ப்பதற்கு பிட்டாக இருப்பார். எங்களையும் அதையே போல் இருக்கச் சொல்லி அறிவுறுத்துவார் .நாங்களும் அதன்படி அப்போது இருந்தேம்  நிறைய ஸ்போர்ட்ஸ் களிலும் நானும் என் அண்ணனும் ஈடுபடுவோம் அதில் நிறைய வெற்றியும் பெற்றிருக்கிறோம் .அதற்காக எங்கள் உடல் தகுதியையும் இவ்வாறு கட்டமைத்துக் கொண்டோம் என்று பதிலளித்தார்.

மேலும் நாங்கள் இதுபோன்ற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கோபிநாத்தின் கேள்விக்கு நடிகர் சரத்குமார் ரொம்ப சிம்பிள் நம்முடைய வாழ்க்கை முறையாகவே இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் என் வாழ்வியல் முறையாகவே உடற்பயிற்சியை மாற்றிக் கொண்டேன். அதேபோல் தன்னுடைய மனதிலும் உறுதி கொள்ள வேண்டும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். அதனால் உடலை ஆரோக்கியப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சரத்குமார்.

ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது மட்டும் உடற்பயிற்சி அல்ல குனிந்து நிமிர்ந்து எழுவதும் வேலை செய்வதும் கூட உடல் பயிற்சி தான் நான் ஆரம்ப காலத்தில் என் அப்பா நிறைய கிணத்தில் தண்ணீர் இறைத்தால் தான் கைகளில் மசில்ஸ் வளரும் என்று கூறுவார் .அதே போன்று அடி பைப்பில் தண்ணி அடிப்பதால் பைசெப்ஸ் வளரும் என்று சொல்லுவார் நானும் அதனால் அவற்றையெல்லாம் கடினமாக முயற்சி செய்வேன் அதுபோன்ற ஒவ்வொரு வேலைகளிலும் நன்மை இருக்கிறது என்று கூறினார். எனக்கு உடற்பயிற்சி செய்யாவிட்டால் அன்று நாள் முழுவதும் பைத்தியம் பிடிப்பது போல் இருக்கும்.

ஷூட்டிங் காக எந்தெந்த இடத்திற்கு நான் சென்றாலும் ஜூம் கிளாஸ் மூலமாவது உடற்பயிற்சியில் மேற்கொள்வேன் என்று கூறினார் நடிகர் சரத்குமார் .

இன்னும் கேட்டால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு போவீர்கள் நான் காலை 3 மணிக்குக் கூட உடற்பயிற்சி செய்வேன் எனக்கு ஏதோ ஒரு நேரம் அதை ஒரு நாளைக்கு செய்தே ஆக வேண்டும். அதுபோன்றுதான் என்னுடைய மனம் இருக்கிறது நான் அப்படி ஆக்கிக் கொண்டேன் அதுபோன்று நீங்களும் ஆக்கிக்கொள்வது கடினம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்று கூறியிருந்தார் நடிகர் சரத்குமார்.

நடிகர் சரத்குமார் அவர் தன்னுடைய ஃபிட்னஸ்க்கு பின்னால் இருக்கும் கடின முயற்சியை பற்றி கூறியது ரசிகர்களுக்கு பெரும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது என்று இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular