Tuesday, May 21, 2024
- Advertisement -
HomeEntertainmentபிகே, 3 இடியட்ஸை மிஞ்சியதா ராஜ்குமார் ஹிராணி - ஷாரூக் கான் கூட்டணியில் வெளியான ”டங்கி”?...

பிகே, 3 இடியட்ஸை மிஞ்சியதா ராஜ்குமார் ஹிராணி – ஷாரூக் கான் கூட்டணியில் வெளியான ”டங்கி”? முழு விமர்சனத்தை இங்கே பாருங்க!

3 இடியட்ஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயகத்தில் ஷாரூக் கான் நடித்துள்ள திரைப்படம் டங்கி. டாப்ஸி, விக்கி கவுஷல், போனம் இராணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் லண்டன் சென்று செட்டிலாக வேண்டும் என்று கனவுடன் இருக்கும் நாயகனாக ஷாரூக் கான் நடித்துள்ளார்.

- Advertisement -

அதற்காக இங்கிலிஷ் கற்றுக் கொண்டு தேர்வு எழுதி, அதன்பின் விசா வாங்கி லண்டன் செல்லும் முயற்சியில் ஷாரூக் கானும், அவரது குழுவும் உள்ளனர். ஆனால் அந்த தேர்விலும் தோல்வியடைய, அரபு நாடுகளின் வழியாக பாலைவனத்தை கடந்து செல்லும் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே டங்கி படத்தின் கதையாகும்.

டங்கி என்றால் எல்லை தாண்டி செல்லும் மக்களை குறிக்கும் சொல் என்று சொல்லப்படுகிறது. அகதிகளாக பற்றி பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காதல், காமெடி, துக்கம் கலந்து எமோஷனல் டிராமாக படம் அமைந்தது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

- Advertisement -

பதான் மற்றும் ஜவான் படங்களில் ஆக்‌ஷனில் புகுந்து விளையாடிய ஷாரூக் கான், டங்கியில் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகள் சிரிக்கவும் உருவகவும் வைக்கிறார். மக்களை எளிதாக கனெக்ட் செய்யும் வகையில் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் அனைத்து அட்டகாசம். அதேபோல் டாப்ஸியை பொறுத்தவரை முதல் பாதி படத்தை காப்பாற்றுவதே அவர் தான்.

- Advertisement -

கத்ரினா கைஃபின் கணவரான விக்கி கவுஷலுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவர் தான் படத்தின் உயிர் நாடியாக அமைந்துள்ளார். ராஜ்குமார் ஹிராணி இயக்கிய பிகே, 3 இடியட்ஸ் அளவிற்கு டங்கி படம் இல்லையென்றாலும், நல்ல ஃபீல் குட் படமாக டங்கி அமைந்துள்ளது. சிரித்து, கண்ணீர் சிந்து பாசிட்டிவ் கிளைமேக்ஸை பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் டங்கியை பார்க்கலாம்.

Most Popular