சினிமா

வாரிசு இசை வெளியீட்டு விழா லைவ் அப்டேட்ஸ் – வாரிசு ஓப்பனிங் சாங் பெயர் ‘ வா தலைவா ’ ! ரஞ்சிதமே பாட்டுக்கு ராஷ்மிகா நடனம் – வீடியோ இணைப்பு

Varisu Audio Launch

பெரிய நடிகர்களின் இசை வெளியீட்டு விழா என்றாலே எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் நடப்பில் விஜய்க்கு சமாளிக்க முடியாத அளவு மக்கள் குவிவர். கடைசியாக அவர் நடித்த மாஸ்டர் படத்திற்கு வரையறுக்கப்பட்ட மக்களுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவிட் காரணமாக பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லை. கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

படத்தின் முக்கிய நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஶ்ரீகாந்த், ஷாம், மற்றும் பலர் வந்துள்ளனர். நாயகி ராஷ்மிகா புடவையில் அழகு தேவதை கணக்காக வந்துள்ளார். வந்தவுடனே ரஞ்சிதமே பாட்டிற்கு ஷோபி மாஸ்டருடன் சேர்ந்து கலக்கலான நடனத்தை போட்டுள்ளார். கடைசியாக விழாவின் நாயகன் நடிகர் விஜய் லைட் பச்சை நிற சட்டையில் மிக சிம்பிளாக வருகை தந்துள்ளார். மேலும் சில முக்கிய விருந்தினர்கள் வரவுள்ளனர்.

Advertisement

வாரிசு படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. அதைத் தவிர்த்து இன்னும் 4 பாடல்கள் இருக்கின்ற. படத்தின் முதல் பாடல் ‘ வா தலைவா ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஷங்கர் மஹாதேவன் பாடியுள்ளார். 2010ல் சுறா படத்திற்குப் பின் விஜய் படத்தின் ஓப்பனிங் சாங்கை இவர் பாடியுள்ளார். சச்சின் படத்தில் ‘ வா வா வா தலைவா ’ எனும் வின்டேஜ் பாட்டைப் போல இதுவும் சிறப்பான பாட்டாக வந்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட முதல் பாடலும் இதுதான்.

Advertisement

ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக படத்தில் விஜய்யின் கிளாசிக் சாங்கான ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிருத் பாடிய பாடலின் பெயர் பாஸ் ரிட்டர்ன்ஸ். இதனைத் தவிர்த்து சித் ஶ்ரீராம் – ஜோனிட்டா காந்தி காம்போவில் ஓர் லவ் டூயட் பாடலும் இடம்பெற்றுள்ளது. பாடலின் பெயர் ஜிமிக்கி.

படத்தில் பாப்பா பாப்பா எனப் பெயரிடப்பட்டுள்ள பாடலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடல்களும் இன்று இரவு 9 மணிக்குள் இணையத்தில் வெளியாகிவிடும். மேலும், ரஞ்சிதமே பாட்டில் ஒரே ஷாட்டில் 1:27 நிமிடங்கள் விஜய் அசத்தலான டான்ஸ் செய்துள்ளார் என நடன மாஸ்டர் ஜானி கூறியுள்ளார். ஒரு நொடிக்கு தொடர்ந்து நடனமாட வேண்டும் என்பது தன் வாழ்நாள் ஆசை எனவும் அதனால் முதல் டேக்கையே பயன்படுத்திக் கொள்ளலாம் என நடிகர் விஜய்யும் சந்தோசமாக பேசினாராம். பீஸ்ட் படத்தில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ஜானி மாஸ்டர் அதை இப்பாடலின் மூலம் போக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top