Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஜவான் எப்போது தான் வரும்.. ? ரீலீஸ் தேதியை உறுதி செய்த ஷாரூக் கான்.. !

ஜவான் எப்போது தான் வரும்.. ? ரீலீஸ் தேதியை உறுதி செய்த ஷாரூக் கான்.. !

பல ஆண்டுகளுக்குப் பின்னர் பத்தான் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார் ஷாருக் கான். இதற்காக பலத்த உடற்பயிற்சி மேற்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலும் ஆனது. பத்தான் படம் என்னதான் 1000 கோடி வசூல் சாதனை புரிந்தாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறத் தவறியது.

- Advertisement -

ரசிகர்கள் அனைவரும் அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தைத் தான் உண்மையான கம்பேக்காக எண்ணி காத்திருக்கின்றனர். படத்தின் அறிவிப்பு தேதியில் இருந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து வெளியாகும் என கூறியிருந்தனர். திட்டமிட்ட தேதியான ஜூன் முதல் வாரம் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

தற்போது செப்டம்பர் 7ஆம் வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த ஒரு பெரிய அப்டேட்டும் இன்னும் வராததால் ரசிகர்களுக்கு இந்தத் தேதியிலும் நம்பிக்கை இல்லை. அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அற்புதமான அப்டேட்டை வழங்கியுள்ளார் ஷாருக் கான்.

- Advertisement -

வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது டிவிட்டரில் ரசிகர்களுடன் கேள்விகள் கேட்கச் சொல்லி உரையாடுவார். இம்முறை அதிகமான கேள்விகள் ஜவான் ரீலீஸ் தேதி குறித்தே ! அதற்கு ஷாருக் கான் நிச்சயம் செப்டம்பர் 7 என்பதை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ நிச்சயம் செப்டம்பர் 7ஆம் தேதி சந்திக்கலாம். ” என்றார். மேலும் விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கு, “ அவர் மிகவும் கூலான நபர். ஆனால் படத்தில் வில்லன். ” என்றார் ஷாரூக் கான். போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரொமோஷன் பணிகளை விரைவில் படக்குழு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவானில் பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் ஹீரோவாக, நயன்தாரா ஜோடியாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் சஞ்சய் தத் ஸ்பெஷல் என்ட்ரியும் கொடுக்கவுள்ளார். இத்தனை சிறப்புகளுடன் அனிருத் இசையில் தியேட்டர்கள் களைக் கட்டப் போகிறது.

Most Popular