Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாஇதான் ஷாருக் கானின் உண்மையான கம்பேக்.. ! அட்லேயின் ஜவான் டீஸர் அப்டேட்.. !

இதான் ஷாருக் கானின் உண்மையான கம்பேக்.. ! அட்லேயின் ஜவான் டீஸர் அப்டேட்.. !

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் அண்மையில் பத்தான் திரைப்படத்தின் மூலம் தரமான ரீ – என்ட்ரி கொடுத்துள்ளார். இத்திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் ஆகியும் விமர்சன ரீதியாக மிகவும் சுமாரான வரவேர்ப்பையே பெற்றது. ஷாருக் கானின் சிக்ஸ் பேக்ஸ், ஆக்சன் காட்சிகள் மட்டுமே ரசிக்கும் விதமாக இருந்தது என பெரும்பாலோனோர் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

ஷாருக் கான் தன் கையில் இன்னும் 3 படங்கள் வைத்துள்ளார். அதில் அடுத்து வருவது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான். கோலிவுட்டில் 4 பிளாக்பஸ்டர்கள் கொடுத்துவிட்டு உடனே பாலிவுட்டின் நாயகன் ஷாருக் கானை இயக்குவது அசுர வளர்ச்சி தான்.

இயக்குனர் அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் வில்லனாக விஜய் சேதுபதி சிறப்பிக்ன்றனர். இசையை அனிருத் ரவிச்சந்திரன் பார்த்துக் சொல்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி ஜவான் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது ஜூன் 2, 2024 படம் உலகெங்கும் வெளியாகும் என்று அன்றே கூறிவிட்டனர். பெரும்பாலான ஷூட்டிங் மும்பை மற்றும் சென்னையில் நடைபெற்றது.

- Advertisement -

படக்குழு தற்போது புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஜவான் திரைப்படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜவான் டீஸர் மே 2ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமான ஆக்க்ஷன் நிறைந்த இந்த டீஸரின் நீளம் 1 நிமிடம் 54 விநாடிகள். ஏப்ரல் 24ஆம் தேதி இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டீஸருக்குப் பின் பாடல்கள், பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா, டிரெய்லர் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது. ஷாருக் கானின் ஜவான் பேன் இந்தியா படமாக உருவாகியுள்ளது. ஷாருக் கானின் மிகப் பெரிய பிளாக்பஸ்டரில் இத்திரைப்படம் இணைந்து அவரின் உண்மையான கம்பேக்காக இது அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular