தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது விஜய்யும் ஒருவராக இருக்கிறார்.எந்த அளவுக்கு என்றால் நடிகர் அஜித், துணிவு திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தை இன்னும் தொடங்காத நிலையில் நடிகர் விஜய் வாரிசு முடித்து லியோனையும் முடித்து தற்போது தளபதி 68 திரைப்படத்திற்காக அமெரிக்கா வரை சென்றிருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்தும் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தன்னுடைய ரசிகர்களுக்கு சாப்பாடு என மறுபுறமும் பிசியாக இருக்கிறார். இதனால் நடிகர் விஜய் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் நடிகர் விஜய் தாயார் ஷோபா youtube தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சிகள் பங்கேற்றுகிறார். அப்போது தமது மகனுக்கு பிடித்த சக்கரை பொங்கல் செய்ய அவர் ஆயத்தமாக இருந்தார்.
அப்போது, திடீரென்று தமக்கு தனது மகன் ஞாபகம் வந்துவிட்டதாகவும் அவருக்கு தொலைபேசியில் பேச இருப்பதாகவும் உடனே நேரலையில் விஜய்க்கு போன் செய்தார். அப்போது விஜயை ஜோ என்று செல்லமாக அழைத்த சோபா சாரிமா நீ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். உனக்கு பிடித்த சக்கரை பொங்கலை செய்தேன்.
அதை உனக்கு வந்து நேரில் கொடுத்து உன்னிடம் பேசலாம் என்று நினைத்தேன் என்று கூறினார். அதற்கு நடிகர் விஜய் தாம் ஹைதராபாத்தில் ஷூட்டிங் இருப்பதாக கூறியவுடன் சரிமா அப்போது திரும்பி நீ வந்தவுடன் உனக்கு இதை நான் செய்து தருகிறேன். உன்னிடம் பேசவே முடியவில்லை.
நீ மிகவும் பிஸியாக இருக்கிறாய் என்று சோபா கூறினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதில் வேலை நிமித்தமாக தொடர்ந்து பிஸியாக இருக்கும் தனது மகனை ஒரு தாய் பார்க்க பேச எவ்வளவு இயங்குகிறார்.மேலும் தம்மால் மகனின் வேலை தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எப்படி பேசுகிறார் என்று ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.