Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாமீனாவின் அழகை ரசிக்கவே வந்தேன்- ஷியாம் கருத்து

மீனாவின் அழகை ரசிக்கவே வந்தேன்- ஷியாம் கருத்து

12பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஷியாம். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை நடித்து இருக்கிறார். மேலும் கன்னடம் ,மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்று இரண்டு திரைப்படங்களும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

12பி தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, இயற்கை, ஏ பி சி டி, உள்ளம் கேட்குதே போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இவை எல்லாம் ஓரளவு இவரை பிரபலப்படுத்திய திரைப்படங்கள் ஆகும். இவர் பெரும்பாலும் காதல் கதையை மையமாக வைத்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பார். அது போன்ற கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாகவும் இருக்கும்.

ஜோதிகா, சிம்ரன், சினேகா,மீரா ஜாஸ்மின், அசின் , லைலா போன்ற முன்னணி நடிகைகளுடன் கதாநாயகனாக நடித்து வந்தார். நடிகர் ஷியாம் நடிகர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி திரைப்படத்தில் கூட நடிகர் ஷாம் வில்லனாக நடித்திருப்பார்.

- Advertisement -

இதற்கெல்லாம் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிகர் ஷாம் சில வருடங்களாக சினிமாவை விட்டு போய்விட்டாரா என்ற அளவிற்கு ரசிகர்கள் எண்ணம் இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் அவருக்கு கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் தளபதி விஜய் நடித்த வாரிசு. இதில் விஜய்க்கு அண்ணனாகவும் வில்லனாகவும் நடித்திருந்த நடிகர் சாம்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளும் கிடைப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நீ போதும என்ற ஆல்பம் பாடலின் உடைய வெளியீட்டு விழாவில் நடிகர் சாம் நடிகை மீனா மற்றும் பரத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்தப் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் சாம் மீனாவைப் பற்றி நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததே மீனாவின் அழகை ரசிப்பதற்காக தான் என்றும் மீனா அன்றிலிருந்து எனக்குப் பிடித்த நடிகை அவரோடு நடிக்க முடியவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

அதற்காக ஆறு மாதம் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டி இருந்தது. அவரிடம் ஒருமுறை நான் விளையாட்டுக்காக பேசியபோது அவர் திடீரென்று கோபமடைந்து விட்டார். ஆனால் அது எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நல்ல படியாக மறுபடியும் பேசத் தொடங்கினார். அவருடைய சாதனைகளை பாராட்டி மீனா 40 என்று நிகழ்ச்சி நடத்தியது சிறப்பானது என்று கூறினார்.

அதே போல் நடிகர் பரத்தை பற்றியும் ஓரிரு வார்த்தைகள் நடிகர் ஷாம் கூறியிருந்தார். நடிகர் பரத் என்னுடைய ஜிம் மேட். கனவில் கூட வருவா ஒர்க்அவுட் செய்யலாம் என்று கூப்பிடுவது போல் எனக்கு அடிக்கடி தோன்றும் என்று நகைச்சுவையாக உரையாடி இருந்தார் நடிகர் ஷாம்.

Most Popular