Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாபிரபல நடிகையுடன் மீண்டும் காதலில் குதித்துள்ள சித்தார்த்!

பிரபல நடிகையுடன் மீண்டும் காதலில் குதித்துள்ள சித்தார்த்!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் , அவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜோடியாக வந்தனர். மேலும் அவர்கள் பல இடங்களில் ஜோடியாக ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இருவரும் அடிக்கடி பார்ட்டி மற்றும் பொதுவிழா நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. “மகாசமுத்திரம்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளின் போது இருவரும் வெளியூர்களுக்கு ஒரே காரில் தான் ஒன்றாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் சித்தார்த். இதை அடுத்து தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர், அவ்வப்போது காதல் சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சமந்தாவை காதலித்து வந்தார். சித்தார்த் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேக்கப் செய்து பிரிந்தனர். இதை அடுத்து நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சமீபத்தில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சித்தார்த், அதிதி ராவ் இருவருமே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். அதேபோல் நடிகை அதிதி ராவ் மணிரத்தினம் டைரக்க்ஷனில் வெளியான “காற்றுவெளியிடை” மற்றும் “செக்கச்சிவந்தவானம்” ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் 43வது பிறந்தநாளில் அதிதி ராவ் ஹைத்ரி இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் பிக்சி பாய். எப்போதும் மந்திர சிரிப்புடனே இருங்கள், எப்போதும் நீயாகவே இரு, முடிவில்லாத சிரிப்பு மற்றும் சாகசங்களுக்கு நன்றி, நீங்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள், என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.” என்று கூறியுள்ளார். இவை எல்லாத்தையும் வைத்து பார்க்கும் போது அவர்கள் காதலிப்பதாக ரசிகர்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Most Popular