Tuesday, May 14, 2024
- Advertisement -
Homeசினிமாகடைசி நேரத்தில் அயலான் படத்தில் இணைந்த சித்தார்த்.. பொங்கல் வெளியீடு.. !

கடைசி நேரத்தில் அயலான் படத்தில் இணைந்த சித்தார்த்.. பொங்கல் வெளியீடு.. !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கும் படம் அயலான். கிட்டத்தட்ட 4 வருடங்களாக இப்படம் ஷூட்டிங்கில் உள்ளது. வி.எஃப்.எக்ஸில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி பார்வையாளர்களுக்கு தத்ரூபமான அனுபவத்தை அளிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் வருகிறார். இவர்கள் தவிர யோகி பாபு, கருணாகரன், ஷரத், இஷா கோபிக்கார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏலியன் பூமிக்கு வந்து செய்யும் நகைச்சுவையான காட்சிகளும் பின்னர் கார்பரேட் இடையே நிகழும் மோதலும் தான் படத்தின் கதை. இன்று நேற்று நாளை போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை அருமையாக செய்த ரவிகுமார் இம்முறையும் அதே பாணியில் மக்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் ஏலியன் கெட்டப்பில் வெங்கட் செங்குட்டுவன் நடித்துள்ளார். பின்னர் அவரது காட்சிகளுக்கு போஸ்ட் புரொடக்ஷனில் வி.எஃப்.எக்ஸ் எடிட் செய்யப்பட்டு மிகவும் நம்பகத்தன்மையாக காட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படம் முழுக்க வரும் ஏலியனுக்கு பெரிய ஆர்டிஸ்ட் டப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி படக்குழு சித்தார்த்தை அணுகியுள்ளனர்.

- Advertisement -

அவரும் தனது பணிகளை அண்மையில் நிறைவு செய்துள்ளார். அதனைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் ரவிகுமார். இதற்கு முன் லயன் கிங் படத்தில் வரும் சிங்கத்துக்கு சித்தார்த் டப்பிங் செய்தது நன்றாக இருந்தது.

நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்ட படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக பொங்கலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் மோதுகிறது.

Most Popular