Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்புவின் 50வது படத்தில் உலகநாயகன் கமல்.. ! பெரிய டிவிஸ்ட்டை கொடுத்துள்ள மணிரத்னம்.. !

சிம்புவின் 50வது படத்தில் உலகநாயகன் கமல்.. ! பெரிய டிவிஸ்ட்டை கொடுத்துள்ள மணிரத்னம்.. !

இயக்குனர் மணிரத்னம் தலைமையில் இரண்டாவது முறை நடிக்க அட்மேன் சிலம்பரசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2018ஆம் ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடித்திருந்தார் சிம்பு. அதாவது கம்பேக் கொடுப்பதற்கு முன் அதிக உடல் எடை இருந்த போது வந்த திரைப்படம். மேலும் மல்டி ஸ்டார் படம் என்பதால் சிம்புவுக்கு குறைந்த இடமே கிடைத்தது.

- Advertisement -

ஆனால் இம்முறை சிம்புவை மிக முக்கிய கதாபாத்திரத்தில் வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இது சிம்புவின் 50வது படமாக ஓர் பெரிய மைல்கல்லையும் எட்டுகிறது. சுட்டிக் சிறுவன் முதல் தற்போது வரை நடிக்கும் சசிம்பும இந்தப் படத்தை ரொம்பவே முக்கியமான ஓர் திரைப்படமாக எண்ணுவார்.

கமல்ஹாசன் 234 – மணிரத்னம்

கடந்த ஆண்டு 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் இணையவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், மெட்ராஸ் டாக்கீஸ் மூவரும் இணைந்த தயாரிக்க வழக்கம் போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்தப் படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை படக்குழு ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. தகுந்த வட்டாரங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க திரிஷா மற்றும் சிம்பு இடம்பெற்றிருப்பதாக கூறுகின்றனர். மணிரத்னம் – சிம்புவின் புதிய படத்தில் ஓர் பெரிய டுவிஸ்ட் உள்ளிருக்கிறது. கோலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்ட கமல் – சிம்பு காம்போ உறுதியாகியுள்ளது.

- Advertisement -

கமல்ஹாசன் 234வது திரைப்படமாக இருந்த படம் தான் இப்போது சிம்பு 50 ஆக மாறியுள்ளது. கமல்ஹாசன் படம் பின்னர் சிம்புவின் படம் என இரண்டு தனித்தனிப் படங்களை மணிரத்னம் இயக்கவில்லை. கமல்ஹாசனின் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அப்படம் சிம்புவின் 50வது படமாக ஆகியுள்ளது. கமல் மற்றும் சிம்பு இருவரும் ஹீரோ தான்.

நிறைவேறிய ரசிகர்களின் ஆசை

கமல்ஹாசனைப் போல் சினிமாவில் பல்துறை திறன் கொண்டவர் சிம்பு. கமல் தொகுத்த வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கையில் எடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் ஓர் வரலாற்று திரைப்படத்திலும் நடிக்கிறார். அதிலேயே கமலை கவிற வேடத்தில் வர ரசிகர்கள் ஆசைப்பட்டனர். தற்போது அதை விட பெரிதான ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.

Most Popular