Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainment21 வயதில் திருமணம்.. 3 பர்சனல் லோன்.. கிரெடிட் கார்ட் லோன்.. வாழ்க்கை எப்படி இருந்துச்சு...

21 வயதில் திருமணம்.. 3 பர்சனல் லோன்.. கிரெடிட் கார்ட் லோன்.. வாழ்க்கை எப்படி இருந்துச்சு தெரியுமா.. ஆர்ஜே பாலாஜி ஷேரிங்ஸ்

எல்கேஜி படத்தின் நாயகனாக நடித்த பின் ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை நடித்தார். ஆர்ஜே பாலாஜி நடித்த அத்தனை படங்களில் நல்ல வசூலை ஈட்டியதால், ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். ஃபீல் குட் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிறுவயதில் முடிதிருத்தம் செய்யும் லாலை பார்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக உருவாக வேண்டும் என்ற இளைஞர் தடைகளை கடந்து எப்படி சாதித்தார் என்பதே கதை.

முதல் பாதி படம் காமெடி பட்டாசாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ஏராளமான பிரச்சனைகளை மெசேஜாக கூறியது பின்னடைவாக உள்ளது. ஆனால் சத்யராஜ் அதகளம் செய்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜியின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், 21 வயதில் எனக்கு திருமணம் முடிந்தது.

- Advertisement -

அப்போது எனக்கு எப்படி புருஷனாக நடக்க வேண்டும் என்று தெரியவில்லை. என் மனைவிக்கு எப்படி மனைவியாக நடக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒரு பக்கம் வேலை பளு இருக்கும். இன்னொரு பக்கம் எனது அம்மா, தம்பி, 3 தங்கை, தாத்தா என்று பெரிய குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும். ஆனால் எனக்கு சம்பளம் வெறும் ரூ.9 ஆயிரம் தான்.

- Advertisement -

அந்த நேரத்தில் எனக்கு வேலை கோவையில். ஆனால் என் குடும்பம் சென்னையில் இருந்தது. அதன்பின் 4 ஆண்டுகள் வாழ்க்கையை ஓட்டியதே பெரும் பாடாக இருந்தது. ஆனாலும் அந்த சூழலில் இருந்து முன்னேறி வந்துள்ளோம். ஆனால் திருமணம் விரைவாக நடந்ததன் காரணமாக என்னால் நல்ல மனிதனாக மாற முடிந்தது. 

சிறிய வயதிலேயே குடும்ப பாரத்தையும், பிரச்சனையும் சந்தித்ததால் என்னால் 26 வயதிலேயே முதிர்ச்சியடைந்த மனிதனாக மாற முடிந்தது. மிடில் கிளாஸ் பையனாக இருந்தால், இஎம்ஐ இல்லாமல் வாழவே முடியாது. நான் ஒரு 3 பர்சனல் லோன் எடுத்துருக்கிறேன். என் தங்கை திருமணம், என் பைக், படிக்க லோன், கிரெடிட் கார்ட் லோன் என்று ஏராளமான கடன்கள் இருந்தது. சம்பளத்தில் இருந்து 15 நிமிடத்தில் காலியாகிவிடும்.

ஆனால் ஒரு கட்டத்தில் நான் பிரபலமாக தொடங்கிய போது, எனக்கு வெளியில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலை வந்த பின் அனைத்து கடன்களையும் அடைத்தேன். அந்த கடனை அடைத்த பின் இனி எந்த கடனும் வாங்க கூடாது என்பதே எனது உறுதியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

Most Popular