Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயிலருக்கு பயந்து ஓடிய மாவீரன்.. ! நயந்தாராவுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. !

ஜெயிலருக்கு பயந்து ஓடிய மாவீரன்.. ! நயந்தாராவுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. !

சிவகார்த்திகேயன் – தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயனுடன் யோகி பாபு, சுனில், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் புரோமோ வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தனர். பின்னர் மெகா படையுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் களமிறங்குவதால் மாவீரன் படக்குழுவினர் ரீலீஸ் தேதியில் மாற்றதை உண்டாக்கியுள்ளனர்.

ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் மாவீரன் திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களே இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கி சிறப்பாக புரொமோஷனைத் தொடர்ந்து படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பர்.

- Advertisement -

அதே ஜூலை 14ஆம் தேதி ஜெயம் ரவி – நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியாகிறது. இயக்குனர் ஐ.அஹமத் இப்படத்தை தலைமை தாங்கியுள்ளார். என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இம்முறை திரில்லர் வகையில் படம் செய்துள்ளார். அதனால் இந்த மோதலை குறைந்து எடையிடக் கூடாது.

- Advertisement -

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள மாவீரன் திரைப்படம் முன் வியாபாரத்தில் பெரிய தொகையைப் பெற்றுள்ளது. 83 கோடிகளுக்கு திரையரங்கு வியாபாரம் முடிக்கப்டுள்ளது. அது தவிர்த்து நல்ல விலைக்கு டிஜிட்டல் உரிமத்தை அமேசான் நிறுவனமும் சேட்டிலைட் உரிமத்தை சன் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

Most Popular