செய்திகள்

பாடலே இல்லாத சிவகார்த்திகேயன் படம்? மேடையில் நடந்த ருசிகரம்

தமிழ் சினிமாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும் நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். டாக்டர், டான் போன்ற திரைப்படங்களில் மாபெரும் வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் என்றாலே அவர்களுடைய பாடல் மிகவும் பிரபலமாகும்.

Advertisement

குழந்தைகள் சிவகார்த்திகேயன் பாடலை மிகவும் விரும்புவார்கள். குழந்தைகளை மையமாக வைத்தும் சிவகார்த்திகேயன் பாடல்களை தயாரிப்பார். அவர்களுடைய படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிகவும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது திரைப்படத்தில் ராஜ் கமல் புரொடக்ஷன் நடிக்கிறார்.

இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த திரைப்படம் முற்றிலும் சிவகார்த்திகேயனை வித்தியாசமாக காட்டும் திரைக்கதையாக இருக்கும் என கூறப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த நிலையில் சாய்பல்லவி நடனத்திற்கு பெயர் போனவர்.

Advertisement

இதனால் இருவரும் முதல் முறையாக இணைந்து இருப்பதால் பாடல்கள் சிறப்பாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேடை ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் நீங்கள் எதிர்பார்ப்பது போல் எனக்கும் சாய்பல்லவிக்கும் இந்த படத்தில் பாடல்களை கிடையாது. இதனால் ஒன்றாக இணைந்து நடனம் ஆட முடியாது. நீங்கள் நினைத்தது இந்த படத்தில் இருக்காது.

அப்படி என்றால் நிச்சயமாக ஸ்பெஷலான ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்க தானே செய்யும். இந்த படம் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்.நான் சாய்பல்லவியுடன் இணைந்து நடிப்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சாய்பல்லவி விடம் நிறைய கற்றுக்க வேண்டிய விஷயம் இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் பாராட்டினார் சிவகார்த்திகேயன் இந்த பேச்சை அருகில் என்று கேட்ட சாய் பல்லவி வெட்கத்தில் மலர்ந்தார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top