Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாகேரளாவில் நடிகர் விஜய்க்கு அடித்த லக்..! லியோவை தடுக்க முடியாது போல!

கேரளாவில் நடிகர் விஜய்க்கு அடித்த லக்..! லியோவை தடுக்க முடியாது போல!

கேரளாவில் நடிகர் விஜய் ஒரு தத்து பிள்ளை போலவே இருக்கிறார். தமிழ்நாட்டில் அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக கேரளாவில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தமிழ்நாட்டில் கூட விஜயை பிடிக்காதவர்கள் நிறைய பேர் விமர்சனம் செய்வது உண்டு. ஆனால் கேரளாவில் ஒட்டுமொத்த மக்களுமே விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார்கள். விஜய் குறித்து ஏதேனும் தவறாக பேசினால் கூட அடி விழுவது கன்ஃபார்ம்.

விஜய் கோட்டை

அந்த அளவிற்கு விஜய்க்கு ஃபேன்ஸ் அதிகம். சூப்பர் ஸ்டார் படம் கூட கேரளாவில் அதிகபட்சமாக 6 முதல் 10 கோடி ரூபாய் தான் வசூல் செய்யும். நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் கேரளா வசூல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான துள்ளாத மனமும் துள்ளும் வசூலை விட குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சுமார் படங்களும் ஹிட் அடிக்கும்

விஜயின் படம் தொடர்ந்து அங்கு 20 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யும். படம் சரியாக போகவில்லை என்றால் கூட அங்கு 12 முதல் 15 கோடி ரூபாய் வசூல் ஆகிவிடும். விஜயின் கடந்த மூன்று திரைப்படங்கள் கேரளாவில் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யவில்லை. இன்னும் பிகில் தான் அங்கு அதிக வசூல் கொடுத்த விஜய் படமாக இருக்கிறது.

- Advertisement -

விக்ரம் சாதனை

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் கேரளாவில் 40 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதற்கு பகத் பாசில் ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறார்.  இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Leo

செம லக்

இந்த படத்தை கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் கொடுத்து கேரள விநியோகஸ்தர்கள் வாங்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு போட்டி போடும் விதமாக மலையாளத்தில் பிரித்திவிராஜ்ஜின் ஆடு ஜீவிதம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இந்த படம் பூஜை விடுமுறையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. இதனால் லியோ திரைப்படம் தனியாக கேரளாவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே அங்கு விஜய் படம் அதிக சிறப்பு காட்சிகள் போடப்பட்டு பெரும் சாதனை படைத்திருக்கிறது.  தற்போது கூட எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் லியோ மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular