Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமா“ உண்மையான ஹீரோ நான் கிடையாது… ” விடுதலை வெற்றி விழாவில் சூரி பேச்சு.. !

“ உண்மையான ஹீரோ நான் கிடையாது… ” விடுதலை வெற்றி விழாவில் சூரி பேச்சு.. !

இயக்குனர் வெற்றிமாறனின் படைப்பான விடுதலை பாகம் 1 அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு இணையாக வெளியான சிம்புவின் பத்து தல மற்றும் நானியின் தசரா திரைப்படங்களை விட விடுதலைக்கே நல்ல வரவேற்பு, விமர்சன ரீதியாகவும் சரி வர்த்தக ரீதியாகவும் சரி.

- Advertisement -

சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பவானிஶ்ரீ மற்றும் சிலர் நடிப்பில் தயாரானது விடுதலை. இப்படத்தில் முதல் முறையாக சூரி ஹீரோவாக நடித்தார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2 – 3 ஆண்டுகள் தொடர்ந்து சென்றது. அனைவரின் அயராத உழைப்பே இப்படைப்பிற்கு இத்தகு சிறப்பை பெற்றுத் தந்துள்ளது. அதைக் கொண்டாட படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது.

முதல் முறையாக ஹீரோவாக நடித்த சூரி தன் அன்பான வார்த்தைகளை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “ படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை. அது வெற்றி அண்ணன் தான். என்னோட லைப்பில் இது மறக்க முடியாத ஒன்று. என்னுடைய அம்மா, அண்ணன், தம்பிகள், குழந்தைகள் என அனைவருக்கும் ஒரு ஆல்பம் போட்டு குடுதுட்டீங்க வெற்றி அண்ணன். மேலும் படத்திற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி, இந்த மிகப் பெரிய கட்டவுட்டுக்கு பின்னால் வலுவாக நிற்பது நீங்கள் தான். ” என்றார்.

- Advertisement -

இதுவரை மொக்க ஜோக் போடும் காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி இப்படத்தில் பார்வையாளர்களின் கைதட்டல்களையும் விசில்களையும் சம்பாதுதுள்ளார். குறிப்பாக அவர் கிளைமாக்ஸ் காட்சியில் அவ்வளவு சிறப்பாக நடித்து இருந்தார். இவ்வனைத்திற்கும் அவர் இயக்குனர் வெற்றிமாறனே காரணம் என அவரைப் பெருமையாக பேசியுள்ளார்.

- Advertisement -

மக்கள் படைத் தலைவராக வரும் விஜய் சேதுபதியும் விழாவில் இயக்குனர் வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளியுள்ளார். “ களிமண்ணாக தான் ஷூட்டிங்க்கு சென்றேன். அவரிடம் இருந்தே நான் எனப் பெறுகிறேன் என்றே எப்போதும் நினைப்பேன். அவர் நிறைய உழைத்து செட்டை மிகப் புத்துணர்ச்சியாக வைத்திருப்பார். ” என விஜய் சேதுபதி பேசினார்.

மேலும், “ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, நான் செய்த டார்சரை சகித்துக்கொண்டு நடித்ததற்கு நன்றி என அவர் படம் வெளியான பின்பு ஃபோன் செய்து பாராட்டினார். கடைசியாக யார் இது போல் அழைத்து என்னிடம் பேசினார் எந்த தெரியவில்லை. ” என்றார். தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் வெற்றிமாறன். இதுவரை எடுத்த அனைத்து படங்களும் ஹிட் ! உண்மையிலேயே அவர் வளரும் இயக்குனர்களுக்கு ஹீரோ தான் !

Most Popular