சினிமா

அஜித்குமாரை இயக்கவிருக்கும் 8 தோட்டாக்கள் & குருதி ஆட்டம் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் ! கதைக்களம் இதுதான்

Ajithkumar and Sri Ganesh

கோலிவுட்டின் டாப் கிரைம் த்ரில்லர்களில் ஒன்று 8 தோட்டாக்கள். ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2017ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பாற்றல் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் இந்த படத்தை வெற்றி பெறச் செய்தது.

முதல் படமே பெரிய வெற்றி ! அதே வேகத்தில் உடனே அடுத்த படத்தின் வேலைகளை துவங்கினார் இயக்குனர் ஶ்ரீ கணேஷ். ஆனால் எதுவும் அவர் நினைத்தபடி அமையவில்லை. கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் இவரது அடுத்த படம் ‘ குருதி ஆட்டம் ‘ தள்ளி போனது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் படத்தில் வேலை செய்தவர்களின் நிலையைக் கூறி கான் கலங்கினார். அதர்வா, பிரியா பவானி ஷங்கர் இடம்பெறும் குருதி ஆட்டம் பல கஷ்டங்களுக்குப் பின் ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Advertisement

இரு தினங்களுக்கு முன் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனின் யூடியூப் நேர்காணலில் கலந்து பேசினார் ஶ்ரீ கணேஷ். அவரின் பல கேள்விகளுக்கு சாந்தமாகவும் அழகாகவும் பதிலளித்தார். கடைசியாக ஶ்ரீ கணேஷ் தான் இந்தப் படத்திற்கு இடையே 2/3 கதைகள் எழுதி வைத்திருப்பதாகவும் விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த 3 கதைகளில் ஒன்று அஜித்குமாருக்காக வைத்திருப்பது நேற்று தெரியவந்துள்ளது. டிவிட்டர் ஸ்பேஸில் இது குறித்து பேசினார் ஶ்ரீ கணேஷ். மதுரையை மையமாகக் வைத்து கேங்ஸ்டர் கதை ஒன்றை அவர் எழுதியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. விக்னேஷ் சிவனுடன் பணியாற்றியப் பின் இவருடன் இணைய வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

அஜித்குமார் 64வது படத்தை இயக்க ஶ்ரீ கணேஷ் மற்றும் தியாகராஜ குமாராஜா இருவரும் காத்திருப்பதாக ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின. மேலும் ஶ்ரீ கனேஷுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். தற்போது டிவிட்டரில் அவர் இது குறித்து பேசியுள்ளதால் ரசிகர்கள் இவர் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஏற்கனவே குருதி ஆட்டம் படத்தில் அஜித்குமாரின் விஸ்வாசம் திரைப்பட ஸ்டில்லை வைத்து அவரது ரசிகர்களின் கைதட்டல்களை சம்பாரித்துவிட்டார் இயக்குனர் ஶ்ரீ கணேஷ்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top