Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாதாம்மாத்தூண்டு ரோலுக்கு அவ்வளவு பில்பட்.. வாங்க லோகேஷ் பாகிஸ்தான் போகலாம்.. லோகேஷ் கனகராஜை வெச்சி வாங்கிய...

தாம்மாத்தூண்டு ரோலுக்கு அவ்வளவு பில்பட்.. வாங்க லோகேஷ் பாகிஸ்தான் போகலாம்.. லோகேஷ் கனகராஜை வெச்சி வாங்கிய மன்சூர் அலிகான்.. !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம் லியோ. இந்தப் படமும் லோகேஷ் கனகராஜ் கேரியரில் மற்றொரு மல்ட்டி ஸ்டாரர் படமாக அமைந்துள்ளது. பொதுவாக பல பெரிய பெரிய நடிகர்களை ஒரே படத்தில் கையாளுவது சவாலான விஷயம்.

- Advertisement -

ஒவ்வொருக்கும் சரியான ஸ்கிரீன் ஸ்பேஸ் வழங்குவது மிகவும் கடினம். மாஸ்டர், விக்ரம் படங்களில் அதைச் சிறப்பாகச் செய்த லோகேஷ் கனகராஜ் இம்முறை தவறியுள்ளார். அதற்கான பேச்சை அவர் தற்போது சம்பாதித்து வருகிறார். லியோ படத்தில் நடித்த மன்சூர் அலி கான் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வார்த்தைகளால் விலாசியுள்ளார்.

லியோ படத்தின் இரண்டாம் பாதியில் இளம் வயது விஜய்யான லியோ தாஸ் கதாபாத்திரத்தின் வரலாற்றைக் கூறும் ஜெயில் கைதியாக வருகிறார். மேலும் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் குறைந்த ஸ்கிரீன் ஸ்பேஸ் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது. இதற்காக இன்று அவர் கொந்தளித்துப் பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ 500 கோடி முதல் போட்டு லட்சம் பேருக்கு வேலையும் போட்டுக் கொடுத்து 1000 கோடி வசூலுக்குப் பாடுபடுகிறோம். ஆனால் அரசியல்வாதிகள் ஒரு கையெழுத்திட்டு 10 ஆயிரம் கோடி, 20 ஆயிரம் கோடிகளை அள்ளிச் செல்கின்றனர். லோகேஷ் என்னை வைத்து அந்த மாறி படம் எடுத்து இருக்கலாமே ! அதை விட்டுவிட்டு தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம்பெரிய பில்டப் ! ” என்றார்.

- Advertisement -

மேலும், “ இல்லனா வாங்க பாகிஸ்தானுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போகலாம். 500 மிலிட்டரி டேங்கர்கள் எடுத்துட்டு வாங்க, போய் மொத்த மிலிட்டரி தளத்தையும் அழிச்சுட்டு வரலாம்.. பாவம் எல்லாரும் சாகுறாங்க. அதைவிட்டு அட்டத் துப்பாக்கியை கையில் கொடுத்துட்டு இருக்கீங்க. வாங்க போருக்கு போகலாம் லோகேஷ். ” எனக் கூறியுள்ளார் மன்சூர் அலி கான்.

மன்சூர் அலி கான் ஏன் இவ்வாறு பெரியதற்கு இரு வாய்ப்புகள் உண்டு. ஒன்று அவர் மக்களை அச்சுறுத்தும் போர் குறித்து ஏதேனும் செய்திகளைக் கண்டு பொங்கியிருக்கலாம். அல்லது லியோவில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திருப்தி இல்லாமல் அவர் இவ்வாறு பேசக் கூட வாய்ப்புள்ளது.

Most Popular