Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்கேப்டன் மில்லரில் இணைந்த மைக்கேல் நடிகர்.. படபிடிப்பு எங்க தெரியுமா?

கேப்டன் மில்லரில் இணைந்த மைக்கேல் நடிகர்.. படபிடிப்பு எங்க தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்போது தீவிரமான படப்பிடிப்பில் இருந்து வருகிறது.
ஒரு வித்தியாசமான முயற்சியாக இந்தத் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பை ஒரு காணொளியாக வெளியிட்டது. கேப்டன் மில்லர் பட குழு அதை பார்க்கும் பொழுதே ரசிகர்களிடம் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் என்பதுதான் அவர்களுடைய திட்டம் ஆகும். அது தற்சமயம் உண்மையாகவும் ஆனது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தற்பொழுது இத்திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு குற்றாலத்தில் நடப்பதாகவும் அதைப்பற்றிய சில புகைப்படங்களும் வந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் புதிதாக தெலுங்கு நடிகர் சுதீப் கிஷான் இணைந்து இருக்கிறார் என்ற தகவலும் தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

குற்றாலத்தில் நடக்கும் படப்பிடிப்பின் போது சுதீப் கிஷன் எடுத்த புகைப்படத்தை தற்பொழுது இணையதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.மைக்கேல் திரைப்படம் மூலம் சுதீப் கிஷன் நல்ல பெயரை பெற்றுள்ள நிலையில், அவருக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது வெளியாகி இருக்கும் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்து வருகிறது.

இந்த நிலையில் இதற்குப் பிறகு வர இருக்கும் இந்த கேப்டன் மில்லத் திரைப்படத்தின் மீதும் ரசிகர்களுக்குபெரும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது
இதுவரை இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி, சாணி காகிதம் ஒன்று திரைப்படங்கள் எல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட பயங்கரமான கதைகளத்தை கொண்டு உருவாக்கி இருப்பார். அதேபோன்றுதான் இந்த கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவில் லாபகரமான நடிகராக தனுஷின் இந்த திரைப்படமும் வெற்றி அடையும். இதன் மூலம் அவர் இன்னும் நல்ல பெயரை பெறுவார். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது.

Most Popular