சினிமா

கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கிய சன்னி லியோன் ! கார்த்திக் படத்தில் நடனம் !

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமானவர். நிறைய படங்களில் கவர்ச்சி பாடல்களில் நடனமாடுவதற்கு மட்டுமே இவரை புக் செய்வதும் வழக்கம். அதுபோல தமிழில் முதன்முறையாக எட்டு வருடங்களுக்கு முன்பு, ஜெய், ஆர் ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த ‘வடகறி’ படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார்.

அதன் பிறகு தமிழில் வீரமாதேவி எனும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் தமிழ் ரசிகர்கள் செம்ம குஷி. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.

Advertisement

இந்நிலையில், தற்போது “தீ ஈவன்” என்ற படத்தில் ஒரு பாடல்குக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி என்பவர் தயாரிக்கிறார். மேலும் இதில் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன், சிங்கம்புலி, ஜான்விஜய், சரவணசக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் காமெடியன்கள் பட்டாளமே இடம்பெற்றுள்ளனர்.

டிஎம் ஜெயமுருகன் என்பவர் இயக்கி தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதி இசையமைத்துள்ளார். ஒய்என் முரளி என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisement

இப்படத்தில் சன்னி லியோன் ஆடுவது குறித்து இயக்குனர் ஜெயமுறுகன் கூறுகையில், தமிழ் கலாச்சாரம் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இப்படத்தில் “மேலே ஆகாயம், கீழே பாதாளம், நடுவில் ஆனந்தம், கொண்டாடு தோழி” என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆட உள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்காக தான் மும்பை சென்று அவரை நேரில் சந்தித்து படத்தின் முழு கதையையும் தெரிவித்து பிறகு அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top