சினிமா

சூர்யா 42 அடுத்த கட்டப் படப்பிடிப்பு எப்போது?- புதிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா . இவர் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இவரது தந்தை சிவக்குமார் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது சிபாரிசு இன்றி தானாகவே முயற்சி செய்து தனது கடின உழைப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் .

ஆரம்ப காலத்தில் இவர திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தனது சாம்ராஜ்யத்தை தொடங்கியவர் . அதன் பிறகு கௌதம் வாசுதேவ் மேனனின் காக்க காக்க மறுபடியும் இயக்குனர் பாலா உடன் இணைந்து பிதாமகன் அதனைத் தொடர்ந்து பேரழகன் கஜினி எனத் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கதாநாயகன் ஆனார்.

நடிப்பு நடனம் மட்டுமல்லாது பாடி பில்டிங் செய்து பிட்டாக இருப்பதினால் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றார். வாரணம் ஆயிரம் ஏழாம் அறிவு மற்றும் அயன் போன்ற படங்களில் இவரது பாடி பில்டிங் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதாகும் .

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கொண்டு வந்த சூர்யாவிற்கு சிறிது சறுக்கல் ஏற்பட்டது . அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின . இதற்கிடையே இயக்குனர் சுதா கொங்காரா அவர்களின் இயக்கத்தில் இவர் நடித்த சூரரை போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது . சமீபத்தில் இப்படத்தில் நடித்ததற்காக இவரது நடிப்பு திறமைக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலிருந்து சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படமானது தற்போது வரை சூர்யா 42 என்று அழைக்கப்படுகிறது . வரலாற்று பின்னணிகள் தயாராகும் இந்த திரைப்படமானது இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட உள்ளதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர் .

இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகையான திஷா பத்தாணி கதாநாயகியாக நடிக்கிறார் . இந்தப் படத்தில் சூர்யா ஐந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்புகள் கோவா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் நடந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து இவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top