Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா 43- புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்! குஷியில் ரசிகர்கள்

சூர்யா 43- புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்! குஷியில் ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கங்குவா என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு 42 வது திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படம் 3d முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏற்கனவே திரைப்படத்தின் உடைய டீசர் வெளியிடப்பட்ட போது ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களை தான் அது பெற்றது.

- Advertisement -

உங்களுக்கு காரணம் நடிகர் சூர்யா மீது ஏற்கனவே ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு தான் கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடப்படாத போது நடிகர் சூர்யாவிற்கு சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டு எதிர்பாராத அளவு வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தால் நிச்சயம் ஒரு ஹிட்டான திரைப்படம் ஆகி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு ஒரு தரமான கதையை கொண்ட திரைப்படம் சூழலைப் போற்று ஆகும். இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுதா கங்கோரா திரைப்படத்தை மிகச் சிறப்பாக கையாண்டு இருந்தார்.

- Advertisement -

இவர்களுடைய காம்போ திரைப்படம் வெற்றி பெற பெரும் பங்காக இருந்தது. மேலும் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கா சிறந்த நடிகருக்காக சூர்யா சிறந்த நடிகைக்காக திரைப்படத்தின் கதாநாயகியான அபர்ணா பால முரளி ,சிறந்த இயக்குனருக்காக சுதா கங்கூரா,சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் குமார் என்று ஐந்து பிரிவுகளில் இத்திரைப்படம் தேசிய விருதுகளைப் பெற்று வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்படிப்பட்ட படத்தில் நடித்த நடிகர் சூர்யா அடுத்தடுத்தும் அதுபோன்ற நல்ல திரைக்கதைகள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இருந்த இந்த நிலையில் கங்குவா டீசர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது.முழு திரைப்படத்தையும் பார்க்க பிறகு தான் அதன் உண்மை நிலை அறிய முடியும். இது ஒரு பக்கம் இருக்க சூர்யா ரசிகர்கள் புத்துணர்ச்சி அடையும் வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வந்த தகவலின்படி இந்த சூர்யா 43 திரைப்படத்தை இயக்குனர் சுதா இயக்க இருக்கிறார். திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

நானும் சுதாவும் சேர்ந்து வேலை செய்யும் பொழுது சில மேஜிக் நிகழ்கிறது சூர்யா 43 திரைப்படத்தில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை சுதா மிகவும் வலிமையாக செய்துள்ளார்.அது தனித்துவமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கூறியிருக்கிறார். மேலும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா நசீம்,நடிகர் விஜய் வருமா அனைத்து கதாபாத்திரங்களும் திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார் பிவி பிரகாஷ்.

இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மீண்டும் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யாவை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Most Popular