சினிமா

மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி ? கத்துக்கிட்ட மொத்தம் வித்தையும் சூர்யாவுக்காக இறக்கும் லிங்குசாமி

Surya and Lingusamy

நடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து படுதோல்வியை சந்தித்த படம் அஞ்சான். 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் லிங்குசாமி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனந்தம் ,ரன் , சண்டக்கோழி , வேட்டை போன்ற படங்கள் மெகா ஹிட் ஆனது. சூர்யாவும் சிங்கம் ஹிட்டுகளுக்கு பிறகு கமர்சியல் சினிமாவில் செம பார்மில் இருந்தார். இதனால் இருவரும் இணைந்து ஒரு படம் பணியாற்றுகிறார்கள் என்றால் அதன் எதிர்பார்ப்பு எப்படி இருந்திருக்கும்.

மேலும் இயக்குனர் லிங்குசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தப் படத்தில் தான் கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் இறக்கி ஒரு படத்தை செய்துள்ளதாக கூறினார் . இது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிற செய்தது .இந்த நிலையில் வெளியான அஞ்சான் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சருக்களை சந்தித்தது , வாட்ஸ் அப், பேஸ்புக் ,டிவிட்டர் போன்ற இணையதளங்கள் அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவில் அசுர வளர்ச்சி பெற்றது. இதில் அனைவருக்கும் கலாய்க்கும் பொருளாக அஞ்சான் மாறியது. இந்த நிலையில் 8 ஆண்டுக்குப் பிறகு நடிகர் சூர்யாவும் லிங்குசாமியும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமியிடம் நடிகர் சூர்யா படத்திற்கான ஒன்றை லைனை கேட்டதாகவும் அது சூர்யாவுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் சினிமா வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சூர்யா இயக்குனர் சிவா, ரவிக்குமார், பாலா,ஞானவேல் ஆகியோர் படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது லிங்குசாமி படத்திலும் கமிட் ஆக இருக்கிறார் . தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தீவிரமாக இறங்கி உள்ள லிங்குசாமி அதனை முழுமைப்படுத்திய பிறகு மீண்டும் சூர்யாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு படத்தில் பணியாற்ற உள்ள மற்ற கலைஞர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் இந்தப் படத்தை விரைவில் எடுத்து முடிக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார் சூர்யாவின் மற்ற படங்கள் முடிந்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கி 2023 ஆம் ஆண்டு தீபாவளி அல்லது 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகலாம். கடந்த முறை தவறவிட்ட இந்த கூட்டணி இம்முறை பட்டையை கிளப்பும் என சூர்யா ரசிகர்கள் நம்புகின்றனர்

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top