Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாலோகேஷ் கனகராஜுடன் 2 படங்கள் உறுதி.. சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. !

லோகேஷ் கனகராஜுடன் 2 படங்கள் உறுதி.. சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. !

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மூவரும் படம் முழுக்க கர்ஜிக்க திடீரென கிளைமாக்சில் அவர்கள் அனைவரது தாக்கத்தையும் சாப்பிட்டவர் சூர்யா. ரோலக்ஸ் கதாபாத்திரம் மூலம் திரையரங்கையே அதிர வைத்தார். விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் ரோலக்ஸ் மற்றும் கைதியை இணைத்து எல்.சி.யூவை உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

லியோ எல்.சி.யூவில் வருகிறதா இல்லையா ?

விக்ரம் படத்திற்குப் பின் மீண்டும் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்து லியோ எனும் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பிரம்மாண்டமான பட்டாளத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் மட்டும் மக்களிடையே உள்ளத், இதனை படக்குழுவும் ரகசியமாக வைத்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் கமல்ஹாசன், மகேந்திரன், லலித்குமார் மற்றும் சிலர் நேரில் சந்தித்து இது குறித்து பேசியுள்ளனர். தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த செய்திகளின் படி லியோ படத்திற்கு ‘ நான் அப்ஜெக்சன் சான்றிதழ் ’ வழங்கப்பட்டுள்ளது. மேலும் லியோ 2 பாகங்கள் என்பதால் நிச்சயம் யுனிவர்சில் வருவது உறுதி.

- Advertisement -

எல்.சி.யூ படங்கள்

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 படங்கள் எல்.சி.யூவில் வரும் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். தற்போது மற்றொரு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நமக்கு கிடைத்துள்ளது. மக்களது கவனத்தை பெரிதும் ஈர்த்த ரோலக்ஸ் கதாபாத்திரம் முழுமையான ஓர் படமாக வரும் என நடிகர் சூர்யாவே சொல்லியுள்ளார்.

- Advertisement -

மேலும் லோகேஷ் கனகராஜ் அப்படத்தின் கதையை ஏற்கனவே கூறிவிட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்து உள்ளதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ரோலக்ஸ் கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் தனித்துவமான படம் ஆகும்.

இது தவிர்த்து மற்றொரு படமும் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் சூர்யா செய்யவுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு சூர்யாவின் ‘ இரும்புக்கை மாயாவி ’ என வலம் வந்த போஸ்டர் வரும் காலங்களில் படமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் முதல் பெரிய படமாக இது அமைந்திருக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular