Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாதமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு.. வாழ்க்கையே மாற்றிவிட்டதாம்!

தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு.. வாழ்க்கையே மாற்றிவிட்டதாம்!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வரும் நடிகை தமன்னா. நயன்தாரா, திரிஷா போன்று ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொடவில்லை. அவ்வப்போது பெரிய ஸ்டார் உடன் நடித்தாலும் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு நடிகை தமன்னா தயாராகி வருகிறார். இதற்காக அவருடைய உடலை கவர்ச்சியாக மாற்றி இருக்கிறார். மேலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு தான் அவரை மாற்றியதாக பேட்டி ஒன்றில்  கூறியிருக்கிறார். நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

- Advertisement -

இதில் சினிமா ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்து வருவதாக தெரிகிறது இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதனை அடுத்து நடிகர் ரஜினி தமன்னா உள்ளிட்டோர் கேக் வெட்டி படம் முடிவடைந்ததை கொண்டாடினர்.

இது குறித்து பேசிய நடிகை தமன்னா ரஜினி சார் உடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது தற்போது நிறைவேறி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெய்லர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாருடன் செலவிட்ட நேரத்தை என் வாழ்க்கை முழுவதும் நினைத்து நான் சந்தோஷப்படுவேன்.

படப்பிடிப்பின் போது ரஜினி சார் எனக்கு பக்தி குறித்து ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். அந்த புத்தகத்தில் ரஜினி சாரின் கையெழுத்தும் இருக்கும். அந்த புத்தகத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது.

என்னுடைய பக்தி பயணத்திற்கு அந்த புத்தகம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இது என் வாழ்க்கையே மாற்றியது என்று கூட கூறலாம் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

Most Popular