சினிமா நடிகர்களை பொறுத்தவரையில் அவர்களுடைய வாழ்நாளில் ஒரே ஒரு தேசிய விருதையாவது வென்றுவிட வேண்டும் என்கிற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அதற்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வளவு இறுதியில் தேசிய விருது கிடைத்து விடாது.
தேசிய விருது விழா முதல்முறையாக 1954ஆம் ஆண்டு நடந்தது . அந்த ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரையில் நடந்த தேசிய விருது விழாவில் நடிகர் என எந்த ஒரு விருதும் வழங்கப் படவில்லை. 1968 முதல் நடிகர்,நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர்,ஒளிப்பதிவாளர் என பல்வேறு பிரிவில் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டது.தற்பொழுது தமிழ் நடிகர்கள் மத்தியில் தேசிய விருதை வென்ற நடிகர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
- எம் ஜி ராமச்சந்திரன்
1971 ஆம் ஆண்டு நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் எம்ஜிஆர் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தென்னிந்திய நடிகர்கள் மத்தியில் முதல் முறையாக தேசிய விருதை வென்ற நடிகரும் எம் ஜி ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
1971 ஆம் ஆண்டு வெளிவந்த ரிக்ஷாக்காரன் படத்தில் எம்ஜிஆரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்தத் திரைப்படத்திற்காக எம்ஜிஆர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
- கமல்ஹாசன்
உலக நாயகனின் பெயர் இல்லை என்றால் தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். எந்த ஒரு நடிகரும் நினைத்து பார்க்காத வகையில் இதுவரை மொத்தமாக மூன்று தேசிய விருதுகளை கமல்ஹாசன் வென்றிருக்கிறார். 1982ஆம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படத்திற்காக, 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படத்திற்காக மற்றும் 1996ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்திற்காக என மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.
இந்த மூன்று திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கல் என்று சொல்லும் அளவுக்கு ஆகச் சிறந்த திரைப்படங்கள் ஆகும். இந்த மூன்று திரைப்படங்களில் நாயகன் மற்றும் இந்தியன் ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற அடிப்படையில் இந்திய மொழி சார்பாக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3.விக்ரம்
2003ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருதை வென்றார். சேது மற்றும் காசி என சிறப்பாக நடித்துக்கொண்டிருந்த விக்ரமுக்கு பிதாமகன் திரைப்படம் பெரும் தீனியாக வந்தமைந்தது.
இத்திரைப்படத்தில் வசனமே பேசாமல் நம் அனைவரையும் அவரது அபார நடிப்பால் கட்டிப் போட்டுவிடுவார். இவரது சிறந்த நடிப்புக்கு கிடைத்த பரிசாக தேசிய விருது, தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது மற்றும் பிலிம்பேர் விருது என மூன்றையும் பிதாமகன் திரைப்படத்திற்காக அந்த ஆண்டு இவர் வென்றது குறிப்பிடத்தக்கது.
- பிரகாஷ்ராஜ்
பிரியதர்ஷன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சிவரம் திரைபடத்தில் பிரகாஷ்ராஜ் பட்டு நெசவாளி ஆக நடித்திருப்பார். அத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரகாஷ்ராஜ் வென்றார்.
குணச்சித்திர வேடத்தில் பிரகாஷ்ராஜ் நம் அனைவரையும் அவரது நடிப்பால் கட்டிப் போடுவது இயல்பான விஷயம் தான். ஆனால் இத்திரைப்படத்தில் ஒரு நடிகராக நம் அனைவரையும் அவரது நடிப்பால் சொக்க வைத்து விடுவார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நம் அனைவரையும் கண் கலங்கச் செய்யும் அளவுக்கு நடித்திருப்பார். இத்திரைப்படத்திற்காக இவர் பிலிம்பேர் விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
மணிரத்தினம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். துணை நடிகர் என்று சொல்வதை விட இணை நடிகர் என்று சொல்வதுதான் சரி. மோகன்லாலுக்கு போட்டி போட்டு அந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார். அவரது நடிப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
- தனுஷ்
2010ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்திற்காக 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை நடிகர் தனுஷ் வென்றிருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரண்டு திரைப்படங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆடுகளம் திரைப்படத்தில் சேவல் சண்டை வீரனாகவும், அசுரன் திரைப்படத்தில் கம்பீர அப்பாவாகவும் நடிகை தனுஷ் தன்னுடைய முழு நடிப்பையும் கொட்டித்தீர்த்திருப்பார். இந்த இரண்டு படங்களும் ஆடுகளம் திரைப்படத்திற்காக தனுஷ் கூடுதலாக பிலிம்பேர் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
- விஜய் சேதுபதி
தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி தேசிய விருதை வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சிறப்பாக உடல் மொழியில் மட்டுமன்றி வசன உச்சரிப்பிலும் பட்டையை கிளப்பி இருப்பார். விஜய் சேதுபதி நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் எப்போதும் தனித்துவமாக நிலைத்திருக்கும்.
விஜய் சேதுபதி போன்று துணை நடிகருக்கான தேசிய விருதை மற்ற நடிகர்களும் வென்று இருக்கிறார்கள். நம்மவர் திரைப்படத்தில் நடித்த நாகேஷ்(1994) , ஹேராம் திரைப்படத்தில் நடித்த அதுல் குல்கர்னி ( 1999 ), நண்பா நண்பா திரைப்படத்தில் நடித்த சந்திரசேகர் (2002), மைனா திரைப்படத்தில் நடித்த தம்பி ராமையா (2010), அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் நடித்த அப்புக்குட்டி (2011) ஆகியோரும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.