Friday, April 26, 2024
- Advertisement -
HomeUncategorizedதளபதி 67 குறித்து மாஸ் அப்டேட் வெளியீடு.. டீசர் எப்போது தெரியுமா?

தளபதி 67 குறித்து மாஸ் அப்டேட் வெளியீடு.. டீசர் எப்போது தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஒரு அறிமுக நடிகருடைய படம்  வருவதாக இருந்தால் அதைப் பற்றிய அப்டேட்ஸ்களை அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கும். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் தளபதி விஜய் உடைய திரைப்படத்திற்கு அப்டேட்ஸ் வந்தால் என்னவாகும்.

தற்போது தளபதி விஜய் தன்னுடைய விஜய் 66 என்ற வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது விஜய் 67 என்ற தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவல் வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்ஸ்கள் தொடர்ந்து இந்த திரைப்படத்தைப் பற்றி வெளியாகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த விஜய் 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ஒரு தொடர்ச்சியான கதைக்களத்தை கொண்டு அமைந்திருந்தது. இதனை லோகேஷ்  சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்று கூறுவார்கள். இதே நிலையில் தற்போது விஜயினுடைய 67 வது படத்தையும் லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவர்சினுடைய மூன்றாவது திரைப்படமாக இருக்குமோ என்று தகவலும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்று வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படம் கைது விக்ரமை போன்று இல்லாமல் முற்றிலும் மாற்றமான  கதைக்களத்தை கொண்டது. அதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்படும் தளபதி  67 திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்திற்காக காத்திருக்கும் இந்த நிலையில் கூடுதலாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் தளபதி நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் கொண்டாட்டத்தில் இருக்கக்கூடிய தளபதி ரசிகர்களுக்கு இந்த தகவல் தளபதி ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்துள்ளது.

மேலும் கூடுதல் மகிழ்ச்சியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தற்போதைய காலத்தில் குந்தவையாக வளம் வரும் நடிகை திரிஷா தளபதி 67 இல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது  . விக்ரம் படத்திற்கு பட டைட்டில் அறிவிப்புக்காக ஒரு வீடியோவை லோகேஷ் கனகராஜ் தயாரித்து வெளியிட்டது போல் தளபதி 67 படத்திற்கும் ஒரு வீடியோவை வெளியிட உள்ளார். அதற்கான படப்பிடிப்பு வரும் ஆறாம் தேதி நடைபெறுகிறது. இதனை எடுத்து வரும் ஜனவரி ஒன்றாம் தேதி பாடத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Most Popular