சினிமா

தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எத்தனை மணிக்கு தெரியுமா? 

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக உள்ள தளபதி 67 திரைப்படம் தொடர்பான அப்டேட் வரும் முதல் வாரத்தில் வெளியாகும் என லோகேஸ் கனகராஜ் கூறியிருந்தார். எனினும் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வாய் திறக்காமல் இருந்தது. தற்போது விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் இன்று வந்துவிட்டது.

Advertisement

சமூக வலைத்தளத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் டிவிட்  ஒன்றை போட்டு உள்ளது. அதில் we at seven screen officially என்று போட்டு கோடிட்டு இருக்கிறார்கள். பின்னர்  மாலை 6.07 மணி வரை காத்திருங்கள் என்றும் அந்த ட்விட்டை முடித்திருக்கிறார்கள். இது தளபதி 67 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பை வெறும் டிவிட்டுடன் முடித்து விடுவார்களா?  இல்லை ஏதேனும் போஸ்டர் ரிலீஸ் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் சினிமா வரலாற்றில் அதிக வருமானத்தை பெற்ற திரைப்படம் என்ற பெயரை ஏற்கனவே தளபதி 67 பெற்றுள்ளது. இதுவரை 300 கோடி ரூபாய் அளவிற்கு பிசினஸ் நடந்துள்ளது.

Advertisement

ஏற்கனவே குடியரசு தினம் அன்று இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாரிசு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது.

பெரும்பாலும் இன்று படத்தை தாங்கள் தான் தயாரிக்க போகிறோம் என்றும் பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் ரிலீஸ் தெரியும் என்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் திரைப்படத்திற்கு எவ்வாறு டீசரை வைத்து ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு ஏற்படுத்தினாரோ அதேபோல் தளபதி 67 படத்திற்கும் ஒரு வீடியோவை லோகேஷ் கனகராஜ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தளபதி 67 திரைப்படத்தில் விஜய் ,அர்ஜுன் கௌதம் மேனன் சஞ்சய் தத் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top