Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் பிரேம்ஜி கூறிய தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் வேற லெவல்ல இருக்கும்

நடிகர் பிரேம்ஜி கூறிய தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட் வேற லெவல்ல இருக்கும்

லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்பொழுது தன்னுடைய 68வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக தற்பொழுது நடிகர் பிரேம்ஜி இதைப் பற்றி ஒரு அப்டேட்ஸை கொடுத்திருக்கிறார்.

ஒரு பேட்டியில் நடிகர் பிரேம்ஜி இடம் தளபதி 68 பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கப்பட்டது .அதற்கு நடிகர் பிரேம்ஜி ட்விட்டரில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட உடைய ஏஜிஎஸ் என்று ஒரு ஹேண்டில் இருக்கிறது. அதில் கேளுங்கள் அதிகமான அப்டேட்ஸ்களை தருவார்கள் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

அதேபோல் அவரிடம் தளபதி 68 தற்போது எப்படி வந்திருக்கிறது என்று கேட்கப்பட்டது. நடிகர் பிரேம்ஜி வேற லெவலில் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த திரைப்படம் தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணியாகும். இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகர் பிரேம்ஜி.

- Advertisement -

இந்நிலையில் தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தற்பொழுது அதனுடைய புரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது .அதில் மேலே பறக்கும் விமானத்தின் உடைய நிலை கீழே விழுவது போன்று இருக்கிறது.

இதை பார்க்கும் பொழுது இதற்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தைப் போன்று இதுவும் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்று தோன்றுகிறது . இந்த திரைப்படத்திலும் விமானத்தில் சிம்பு பயணிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தையும் யாரும் எதிர்பாராத அளவிற்கு வித்தியாசமான திரை கதையாக இயக்குவார் என்று பெரும் நம்பிக்கை இந்த திரைப்படத்தின் மீது தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

Most Popular