Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாதிடீரென வைக்கபடும் தளபதி 68 பூஜை.. ஷூட்டிங் தேதி அறிவிப்பு.. ஆரம்பமே அமர்க்களம்.. !

திடீரென வைக்கபடும் தளபதி 68 பூஜை.. ஷூட்டிங் தேதி அறிவிப்பு.. ஆரம்பமே அமர்க்களம்.. !

தளபதி விஜய் புகழின் உச்சத்தில் உள்ளார். அவரின் ஒவ்வொரு அடுத்தடுத்த படங்களுக்கு கூட்டமும் வசூலும் கூடிக்கொண்டே தான் போகிறது. லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறை இணைந்து செய்துள்ள லியோ திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரீலீசுக்கு காத்திருக்கிறது.

- Advertisement -

தற்போது லியோ படத்தின் புரொமோஷன் பணியில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ரீலீசுக்கு 20 நாட்களே இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பின் தளபதி விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லியோ படம் ஷூட்டிங்கில் இருக்கும் போதே தளபதி விஜய் தன் அடுத்தப் படத்தின் அறிவிப்பை கொடுத்துவிட்டார். தளபதி 68 என இப்போதைக்கு குறிப்பிட்டு வருகின்றனர். என்னதான் இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னரே வந்துவிட்டாலும் படம் குறித்த எந்த வித அப்டேட்டும் அதற்கு பின் வரவில்லை, தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று கூட.

- Advertisement -

ஒரு படத்தை முழுமையாக முடித்துவிட்ட பிறகு சில வாரங்கள் வெளிநாட்டில் ஓய்வு பெற்றுவிட்டு பின்னரே விஜய் தன் அடுத்தப் படத்தை துவங்குவார். தளபதி 68 மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. லியோ படம் நிறைவு செய்துவிட்டு வழக்கம் போல் ஓய்வுக்குப் பின் வெங்கட் பிரபு & கோவுடன் முதற்கட்ட பணிகளுக்காக வெளிநாடு சென்றார் விஜய்.

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு நம் தளபதி விஜய்யின் புகைப்படங்களை வெளியிட்டதை கூட நாம் கண்டோம். தளபதி 68யின் அனைத்து முதற்கட்ட பணிகளும் முடிவடைந்து தற்போது படக்குழு ஷூட்டிங்கிக்கு செல்லத் தயாராகி உள்ளது. நாளை அக்டோபர் 1ஆம் தேதி பூஜைகள் நடக்கவிருக்கிறது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் தளபதி 68 ஷூட்டிங் நடக்கும். படப்பிடிப்பை இயக்குனர் ஓர் பாடலுடன் துவங்கவுள்ளார் என தகளவ்கள் வந்துள்ளது. சில நாட்களுக்கு ஐடியா அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68யின் முதல் பாடல் ஓர் தரமான குத்துப் பாடலாக அமையும் என கூறியிருந்தார்.

தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போ அமைய வேண்டுமென பல ஆண்டுகள் விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதோடுது யுவன் இசையில் தளபதி விஜய்யைப் பார்க்க வேண்டுமெனவும் தான். இரண்டுமே நடப்பது அவர்களின் எதிர்பார்ப்பை கூடியுள்ளது. தளபதி படம் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகம் தானே.

Most Popular