Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் பட இயக்குனருடன் இணைந்து தளபதி 68 படம் செய்யும் விஜய்.. ! யுவன் இசை.....

அஜித் பட இயக்குனருடன் இணைந்து தளபதி 68 படம் செய்யும் விஜய்.. ! யுவன் இசை.. !

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தை உருவாக்கி வருகிறார் இளையதளபதி விஜய். சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட ஓர் பிரம்மாண்ட படையே நடிக்கும் இப்படத்திற்கு இமாலய உச்சி அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படம் ஷூட்டிங்கில் விரைந்து செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் 19 ஆயுத பூஜைக்கு உலகெங்கும் வெகியாகவும் உள்ளது.

- Advertisement -

இதனிடையே விஜய்யின் அடுத்த பட அப்டேட் குறித்து பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. முதலில் அட்லியுடன் செய்வதாக கூறிய படத்தை தள்ளி வைத்துவிட்டு இடையே வேறொரு இயக்குனருடன் இணைய திட்டமிட்டுள்ளார் நடிகர் விஜய். முதலில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனியிடம் கதை கெட்ட விஜய் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். உடனே அவர் தான் அடுத்த இயக்குனர் என வதந்திகளை பரப்பத் துவங்கியது ஓர் கூட்டம்.

கோபிசந்த்க்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ், சுதா கோங்காரா ஆகியோரிடமும் கதை கேட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் வந்தால் நல்ல இருக்கும் என ரசிகர்கள் பலர் அசையும்பட்டுள்ளனர். ஆனால் எந்த இயக்குனர் என இன்னும் அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை‌. தற்போது டிவிட்டரில் இயக்குனர் வெங்கட் பிரபு என பேசிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

தளபதி 68 – வெங்கட் பிரபு

மங்காத்தா படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஓர் படம் செய்ய வேண்டுமென விஜய் ஆசையாக இருந்தார். ஆனால் காலம் அதற்கு இடம் தரவில்லை. தற்போது தகுந்த வட்டாரங்களில் வெங்கட் பிரபு தளபதி விஜய்யை இயக்குவது உறுதியாகிவிட்டதாக சொல்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பணிகள் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த செய்தியை டிவிட்டரில் மறைமுகமாக வெங்கட் பிரபுவே ஓரளவு கன்பார்ம் செய்துள்ளார். நிதின் சத்யா எனும் சினிமா விமர்சகர் தளபதி 68 செய்திக்கு வெங்கட் பிரபுவின் குறிப்பிட்டு “ அண்ணா சொல்லவா ” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு வெங்கட் பிரபுவும் “ டேய் அமைதியாக இரு ” என ரிப்ளை செய்துள்ளார். மற்ற சினிமா சம்மந்தப்பட்ட பிரபலங்களும் இச்செய்தி உறுதி என விஜய் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஓர் ஜாலியான படம் வந்தால் பழைய விண்டேஜ் விஜய்யை பார்த்தது போல் இருக்கும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். 2003ஆம் ஆண்டு புதியகீதை எனும் ஒரே விஜய் படத்திற்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு படம் என்றால் நிச்சயம் யுவனும் இணைவார். அதனால் இம்முறை விஜய் – யுவன் காம்போவும் பார்க்கலாம். எல்லா வருடம் போல் விஜய்யின் பிறந்த நாள் அன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். பட

Most Popular