Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentதளபதி விஜய் படத்தில் நடித்திருக்க கூடாது.. படப்பிடிப்பிலேயே தெரிந்துவிட்டது.. ”சுறா” படத்தை கொத்துக்கறி போட்ட தமன்னா!

தளபதி விஜய் படத்தில் நடித்திருக்க கூடாது.. படப்பிடிப்பிலேயே தெரிந்துவிட்டது.. ”சுறா” படத்தை கொத்துக்கறி போட்ட தமன்னா!

இயக்குநர் எஸ்பி ராஜகுமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் சுறா. நடிகர் விஜய்-ன் 50வது படமான சுறாவில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார். அதேபோல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடற்கரையில் வாழும் மீனவர்களுக்கு அவர்களின் இடத்திலேயே சொந்த வீடு கட்டித் தருவதை லட்சியமாக வைத்துள்ள சக மீனவனின் கதையாக சுறா எடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் திரைக்கதை சொதப்பலாக அமைய, சுறா படம் விஜய் ரசிகர்களே திட்டும் அளவிற்கு மோசமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் படம் தோல்வியை சந்திக்க, விஜய் சினிமா வாழ்க்கையிலேயே மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் விஜய் ஓரளவு திரைக்கதை மற்றும் இயக்குநர்களை கவனமாக தேர்வு செய்ய தொடங்கினார்.

இந்த நிலையில் சுறா படத்தில் தோல்வி குறித்து நடிகை தமன்னா பேசியிருக்கிறார். அதில், சுறா படத்தில் நான் நடித்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் படத்தில் நடிக்கும் போதே எனது கதாபாத்திரம் எனக்கே ஒன்றவில்லை. என் நடிப்பும் மோசமாக இருந்ததால், படப்பிடிப்பின் போதே சரியாக படவில்லை.

- Advertisement -

ஆனால் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின் அதிலிருந்து பின் வாங்க கூடாது. ஏனென்றால் வணிகம் சார்ந்து சிலர் பாதிப்படைய கூடும். அதனால் வெற்றி, தோல்வி பற்றி எல்லா நேரங்களிலும் சிந்தித்து கொண்டிருக்க முடியாது. கமிட்டாகிவிட்டால் அது வேலையின் ஒரு அங்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

நடிகை தமன்னா விஜயுடன் நடித்த ஒரே படம் சுறா தான். அதன்பின் அஜித் குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தாலும் மீண்டும் விஜய் உடன் மட்டும் இணைந்து நடிக்க முடியவில்லை. தற்போது பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகை தமன்னா விரைவில் விஜய் வர்மாவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular