சினிமா

தளபதி விஜய் நடிக்கும் 67வது படமும் என் படம் தான் ; விக்ரம் பட வெற்றி விழாவில் லோகேஷ் கனகராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் ஜூன் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது வரையில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் பாகுபலி 2 செய்த சாதனை அனைத்தையும் விக்ரம் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக விக்ரம் படம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றி அடைந்ததை ஒட்டி திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நேற்று விக்ரம் திரைப்படம் வெற்றி விழாவில் கறி விருந்து போடப்பட்டது. விக்ரம் திரைப்படத்தின் முதல் முன்னோட்டத்தில் கமலஹாசன் கறிவிருந்து போடுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். கறி விருந்தில் ஆரம்பித்து தற்பொழுது கறிவிருந்தில் வெற்றி விழா நிறைவு பெற்றுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடிக்கு மேல் ஷேர் செய்துள்ளது

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் வந்துள்ளதாக அத்திரைப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் ரெட் ஜெயிண்ட் ஃபிலிம்ஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

தளபதி நடிக்கும் அடுத்த படமும் என்னுடைய படம்தான்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று பேசிய பொழுது” படம் வெற்றி பெற்றவுடன் எனக்கு கமல் சார் கால் செய்தார். எந்தவித ஓய்வு எடுக்க வேண்டாம் உடனடியாக அடுத்த பட வேலையில் இறங்கி விடுங்கள்”, என்று வாழ்த்து தெரிவித்ததாக மகிழ்ச்சி பொங்க கூறினார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், “நான் அவரிடம் தொலைபேசியில் என்னுடைய படத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் அவருடைய அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்தேன். என்னுடைய படம் வெற்றி பெற்று விட்டால் மட்டும் போதும் என்று நினைப்பது தவறு. அவருடைய அடுத்த படமும் வெற்றி பெற வேண்டும் அதுவே என்னுடைய ஆசை.

அடுத்து அவர் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருக்கும் தளபதி 67 படமும் என் படம்தான். அத்திரைப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் பயமும் அல்லது சந்தேகம் இருந்தால் நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்”, என்று மேடையில் வைத்து லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் சர்ப்ரைஸ் கொடுத்தார். கமல்ஹாசன் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top