Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாகோட் திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்கவில்லை .. அதனால் ரசிகர்கள் வருத்தம்..!

கோட் திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்கவில்லை .. அதனால் ரசிகர்கள் வருத்தம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்பட படப்பிடிப்பு வெகு விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இப்படி இணையம் முழுவதும் அனல் போல் வெடித்து வந்தது தளபதி பற்றிய செய்திகள் .தற்போது அதில் ஜில்லென்று ஐஸ்கிரீமை வைத்தது போல நடிகை சினேகாவும் மோகனும் இணைந்து நிற்கும் புகைப்படம் வைரல் ஆக்கி வருகிறது.

இதைக் கண்டவுடன் ரசிகர்கள் இதன் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார்கள். கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் தந்தை ,மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை ஃபர்ஸ்ட் போஸ்டரிலேயே ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.

- Advertisement -

அதேபோல் இந்த திரைப்படத்தில் தளபதியுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல் ,பிரபுதேவா ,சினேகா ,லைலா, மோகன் என்ற பல பிரபலங்கள் நடிப்பதும் தெரிந்ததால் தந்தை விஜய்க்கு லைலா அல்லது சினேகா தான் ஜோடியாக இருப்பார்கள் என்று பலரும் நினைத்து வந்தார்கள்.

- Advertisement -

வசீகரா திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய்யும், சினேகாவும் கோட் திரைப்படத்தில் இணைய போகிறார்கள் என்று ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் இருந்தார்கள். அதேபோல் நடிகை லைலாவும் இதுவரை தளபதி விஜய் உடன் நடித்தது இல்லை என்று பல பேட்டிகளின் கூறி இருந்ததை தொடர்ந்து இதில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூட நினைத்தார்கள்.

ஆனால் தற்பொழுது சினேகாவும், மோகனும் நெருக்கமாக போட்டிருக்கும் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவர்கள் தான் அதில்  ஜோடியாக இருப்பார்களோ என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

80’இன் காதல் மன்னனாக தமிழ் சினிமாவை கலக்கிய மோகனுடன் 90′ ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இருக்கும் புன்னகை அரசியான சினேகா இணைவது சிறந்த ஜோடியாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular