தமிழ் திரையிலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன், பல்வேறு படங்களை இயக்கி தேசிய விருதுகளை பெரும் அளவிற்கு முன்னணியில் இருக்கிறார். இவரின் பெரும்பாலான படங்கள் நாவல்களை தழுவியே இருக்கும்.
விசாரணை என்ற படம் “லாக்கப்” எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. அடுத்ததாக, பூமணி எழுதிய ‘வெட்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு மெஹாஹிட் படமான ‘அசுரன்’ திரைப்படமாக்கப்பட்டது. தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்ததாக சி.சு செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை தானு தயாரிக்கின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கப் உள்ளார்.
வாடிவாசல் படம் பெயருக்கு ஏற்றவாறு ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்பது உலகறிந்த விஷயம்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய “பேட்டைகாளி” என்ற வெப் சீரிஸை வெற்றிமாறன் தயாரித்து, அதனை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து வெற்றி மாறனிடம் கேட்டபோது,
“பேட்டைகாளி இன்றைய நடைமுறையில் உள்ள ஜல்லிக்கட்டு பற்றிய விஷயம் மட்டுமே, ஆனால் வாடிவாசல் திரைப்படம் 1960களில் ஜல்லிக்கட்டு எப்படி நடந்தது என்பதையும் நம் பாரம்பரியத்தை பற்றியும் உள்ள கதை.” என விளக்கம் அளித்துள்ளார்.
வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆசைக்கொண்டு பார்க்கச் சென்ற நாயகன், எதர்ச்சையாக காதில் விழுந்த ‘ஜமீன்தார் காளையை யாராலும் அடக்க முடியாது.’ என்ற செய்தியை கேட்டு வாடிவாசலுக்குள்ளே சென்று அந்த காளையை எவ்வாறு அடக்கினார் என்பதே இதன் கதைக்களம்.
ஒரு மாடுபிடி வீரரின் மகன், எல்லா ஜல்லிக்கட்டுக்கும் சென்று மாடுபிடி வித்தையை கண்டு ரசிக்கும் ஒருவர் எவ்வாறு ஜமீன்தாரின் மாட்டை அடக்குகிறார் என்பதே கதையாகும்.