Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதியேட்டருக்கு போகும் ரசிகர்களா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி

தியேட்டருக்கு போகும் ரசிகர்களா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி

திரையரங்குகளுக்கு ஒரு படத்திற்கு ஒரு குடும்பமாக சென்றாலே 2000 அல்லது 3000 ரூபாய் செலவாகிறது என்று வருத்தப்படும் நபர்களா நீங்கள். இல்லை தனியாக ஒரு படத்திற்கு சென்றாலே 500 ரூபாய் ஆகிறது. இனி படத்திற்கு செல்ல வேண்டாம் பட்ஜெட் இடிக்கிறது என நினைக்கும் ரசிகர்களா நீங்கள்.

- Advertisement -

உங்களுக்காக ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது. அண்மையில் திரையரங்கில் இன்டெர்வலில் வசூலிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சேர்த்தால் ஒரு ஆண்டு அமேசான் தொகையை கட்டிவிடலாம் என்று அறிக்கை ஒன்று வெளியானது.

இதை பார்த்ததும் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நமது பிசினஸ் காலியாகி விடுமோ என்று அவர்கள் அச்சம் கண்டனர். இதற்கு அவர்கள் சொன்ன காரணமும் ஏற்கும் வகையில் தான் இருந்தது. நாங்கள் வசூலிக்கும் உணவுப்பொருட்களுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டியை போடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

- Advertisement -

இதனால் கேண்டினில் விற்கப்படும் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அரசிடம் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து தற்போது திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் இனி இன்டெர்வளில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதனால் நீங்கள் உங்கள் பட்ஜெட்டை கவலையின்றி செலவழிக்கலாம். ஆனால் இதில் ஒரு உள்குத்து வைக்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் யோசித்து வருகிறார்கள்.

அதன்படி ஜிஎஸ்டி விலை குறைந்தாலும் பொருட்களின் விலையை குறைக்காமல் பொருட்களின் அளவை அதிகரித்து அதே விலையில் விற்க சிலர் முடிவெடுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பிவிஆர் சினிமாஸ் இனி பாப்கானை எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களுடைய டப்பாவில் நிரப்பி கொள்ளலாம் என்று ஒரு சலுகையை அறிவித்திருக்கிறார்கள்.

இதேபோன்று தமிழகத்தில் சினிமா டிக்கெட் காண லோக்கல் என்டர்டைன்மென்ட் வரியை தமிழக அரசு குறைத்தால் சினிமா டிக்கெட்டின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

Most Popular