Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாலியோவுக்கு 6 மணி காட்சி போடாமல் மற்ற படங்களுக்கு போட்ட திருப்பூர் சுப்ரமணியன் பதவி நீக்கம்.....

லியோவுக்கு 6 மணி காட்சி போடாமல் மற்ற படங்களுக்கு போட்ட திருப்பூர் சுப்ரமணியன் பதவி நீக்கம்.. !

தமிழக தியேட்டர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு வந்த நோட்டீஸை அடுத்து இந்த முடிவுக்கு வந்து பதவியில் இருந்து அவரே விலகியுள்ளார்.

- Advertisement -

தன் திரையரங்கில் தமிழா அரசின் விதிகளை மீறி அதிகாலை காட்சிகளை திரையிட்ட காரணத்திற்காக அவரின் தியேட்டர் மீதும் அவரின் பதவிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவரே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வேறு காரணங்களும் கூறுகிறார்.

துணிவு, வாரிசு படங்களின் மோதலில் அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நின்று கொண்டாடிய போது கீழே தவறி விழுந்து இறந்தார். மேலும் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் மோதலும் இருந்தது, குறிப்பாக ரோஹிணி சில்வர் ஸ்கிரீன்ஸில்.

- Advertisement -

அதிகாலை காட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக ஓர் வழக்கமாக ஆகிவிட்டது. அதில் கொண்டாட்டம் இருந்தாலும் சில துயரங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன. அதிகாலை 4,6 என திரையிடப்படும் காட்சிகள் சுற்றி இருக்கும் மக்களையும் பாதிக்கின்றன என்பதால் எந்தப் படத்திற்கும் 9 மணி தான் முதல் காட்சி எனும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

- Advertisement -

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய லியோ படத்திற்கு அவ்வளவு மேல் முறையீடு நடந்தும் சிறப்புக் காட்சி கொடுக்கப்படவில்லை. தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் தியேட்டர்கள் இடையே பங்கீடு குறித்த விவாதங்களும் பெய சிக்கலாக போனது. அந்த வேளையில் லியோ 9 மணி காட்சிக்கே திருப்பூர் சுப்ரமணியன் ஒத்துழைத்தார்.

ஆனால் அவரது திரையரங்கில் ஜெயிலர் படம் 6 மணி காட்சிகளை திரையிட்டது. பங்கீடு விவாகரத்தில் லியோ படத்திற்கு அவர் தயாரிப்பாளர் பக்கம் நிற்கவில்லை எனும் கோபம் விஜய் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அண்மையில் வெளியான ஹிந்தி படமான டைகர் – 3 திரைப்படத்திற்கு 6 மணி காட்சி போடப்பட்டதால் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அவர் கூறியதாவது, “ ஹிந்தி படங்களுக்கும் தமிழக அரசின் விதிமுறைகள் பொருந்தும் என்பதை நான் அறியவில்லை. மேலும் என் சொந்த பணிகளுக்காக இப்பதவியில் இருந்து நான் விலகுகிறேன். ” ஜெயிலர் படத்தின் போது யாரும் அதனைப் பார்க்கவில்லை இல்லையெனில் அப்போதே மாட்டி இருப்பார்.

Most Popular