Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஇன்று மட்டும் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. கண்ணீரில் தயாரிப்பாளர்கள் ஒரு பார்வை

இன்று மட்டும் 8 திரைப்படங்கள் ரிலீஸ்.. கண்ணீரில் தயாரிப்பாளர்கள் ஒரு பார்வை

- Advertisement -

தமிழ் சினிமாவின் ஒன்றின் பின் ஒன்றாக திரையரங்குகளில் பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது . அதிலும் ஏப்ரல் ஏழாம் தேதியான இன்று மட்டுமே எட்டு திரைப்படங்கள் தமிழில் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள்.

இயக்குனர் என் எஸ் பொன் குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த ஆகஸ்ட் 16 1947 என்ற திரைப்படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் ந சீமான் நடித்த முந்திரிக் காடு என்ற திரைப்படமும்
இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் நடிகர் சந்தோஷ் சரவணன் நடித்த கதையல்ல நிஜம் என்ற திரைப்படமும், இயக்குனர் ரத்தினவேல் இயக்கத்தில் தலைக்கவசமும் நான்கு நண்பர்களும் என்ற திரைப்படமும், இயக்குனர் ஸ்டீபன் ஜோசப் இயக்கத்தில் யோசி என்ற திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இவற்றைப் போல் ரேசர் மற்றும் எவன் என்ற திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி இருக்கின்றது.இத்தனை திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானது போதாது என்று  ஹாலிவுட் திரைப்படமான இந்த போப்ஸ் எக்ஸ்ராஸ்ட் என்ற திகில் திரைப்படமும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த மாத கடைசியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்பதால் முன்னதாகவே இந்த திரைப்படங்களை எல்லாம் திரையரங்கில் வெளியிடப்பட்டு விட்டார்கள்.  ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியிடப்பட்டதால் போதிய காட்சிகள் கிடைக்காதது தயாரிப்பாளர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது. போட்ட காசை வசூல் செய்ய முடியாது என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் . இந்த பிரச்சினை தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக உள்ளது.

Most Popular